ஜாதி எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை என்ன?
கல்கத்தாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாட்டில் கட்சியின் எதிர்கால செயல் திட்டங்களில் ‘ஜாதி ஒடுக்குமுறை களுக்கு முன்னுரிமை தரப்படும்’ என்ற கருத்தை, பிரகாஷ் காரத், கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் வலியுறுத்தி யுள்ளது வரவேற்கத்தக்க ஒரு திருப்பம். இந்தியாவில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பொருளாதாரச் சுரண்டல் – சமூக ஒடுக்குமுறை என்ற இரண்டு பிரச்சினை களையே மய்யம் என்று தீர்மான நகல் கூறுகிறது. சமூக ஒடுக்குமுறை என்று பார்த்தால் பெண்கள், தலித், பழங்குடி யினர் மற்றும் மத அடிப்படையிலான மைனாரிட்டிகள் மீது காட்டப்படும் பாகுபாடுகள் என்று சீத்தாராம்யெச்சூரி விளக்கமளித்துள்ளார். அதே நேரத்தில், ஜாதி அமைப்புக்கு எதிரான கருத்தியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு தெளிவாக்கப்படவில்லை. ஜாதிய பாகுபாடுகள் – ஒடுக்குமுறைகள் குறித்து மட்டுமே நகல் தீர்மானம் பேசுகிறது. இன்னும் ஒரு நிலைக்கு மேலே போய் சீத்தாராம் எச்சூரி, கட்சியின் நிலையை இவ்வாறு தெளிவுபடுத்தியிருக்கிறார். “பொருளாதார அதிகாரத்தை...