புரட்சிகர கலை நிகழ்ச்சிகள்; எழுச்சி உரைகள் உணர்ச்சிகரமான சென்னை மாநாடு
“இந்தித் திணிப்பை எதிர்ப்போம்; இழந்து வரும் உரிமைகளை மீட்போம்” எனும் முழக்கத்தை முன் வைத்து திருவான்மியூர் தெப்பக்குள மைதானத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாநாடு 4.6.2017அன்று மாலை 5 மணியளவில் எழுச்சியுடன் தொடங்கியது. சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் – இந்த மாநாட்டை கழக தலைமைக் குழுவின் தீர்மானத்தை ஏற்று நடத்தியது. திருவான்மியூர் பகுதி முழுதும் கழகக் கொடிகள் ஏராளமாகக் கட்டப்பட்டிருந்தன. பெரியார்-அம்பேத்கர் படங்களோடு அமைக்கப்பட்டிருந்த மேடை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. நகரம் முழுதும் சுவரெழுத்துகள் எழுதப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. மாவட்ட செயலாளர் உமாபதி வழிகாட்டுதலில் 20க்கும் மேற்பட்ட கழக இளைஞர்கள் 15 நாள் இரவு பகல் பாராது கடுமையாக உழைத்தனர். மாநாட்டு திடலில் நிரம்பி வழிந்த கூட்டத்துக்கு கழகத் தோழர்கள் நடத்திய துண்டறிக்கை பரப்புரைகளும் விளம்பரங்களுமே பெரிதும் காரணம். காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள் புரட்சிகர பறை இசை, பாடல், நடனம், நாடகம் மாநாட்டுக்கு உணர்வூட்டின. கலை...