கருவிலேயே வேதப் பண்பாட்டை ஊட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ‘ஆரோக்கிய பாரத்’ அமைப்பு, கருவிலேயே இந்து மதநெறியோடு குழந்தைகள் பிறக்க – வேத மந்திர பயிற்சி அளிக்கிறதாம். அண்மையில் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் ஒரு விசித்திரமான, வழக்கொன்று விசாரணைக்கு வந்தது. மேற்கு வங்க குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம், சட்ட அதிகாரி நாசிப்கான் தொடுத்த பொது நல வழக்கு தான் அது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் சுகாதாரப் பிரிவு “ஆரோக்கியா பாரத்” அமைப்பு பயிற்சிப் பட்டறை ஒன்று நடத்தியுள்ளது. அந்தப் பயிற்சிப் பட்டறையின் குறிக்கோள், கணவன் -மனைவியரை அழைத்து அவர்களுக்கு அறிவுரையும், பயிற்சியும் தருவார்களாம். அறிவுக்கு பொருந்தாத இப்பயிற்சியை தடுக்க வேண்டும் என்பதே வழக்கு! கருவிலேயே இருக்கிற குழந்தையை தூய்மைப்படுத்துவது இதன் உள்நோக்கம் கருவிலேயே குழந்தையை அறநெறியோடு இந்துமத நெறியோடு இந்துமத தூய்மை யோடு குழந்தையை உருவாக்கி பிறக்க வைப்பது. அடுத்து கணவனை, மனைவியை அந்தத் தம்பதிகளின் மனப் பக்குவத்தை ஆய்ந்து பாரம்பரியமான இந்துத்துவ சடங்காச்சாரங்களைக் கற்றுக் கொடுத்து பிறக்கும்...