ஆடைக் கட்டுப்பாடு
கோயில்களில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்திருக் கிறது மதுரை உயர்நீதிமன்றம். இனி கோயிலுக்கு வரும்போது வேட்டி, சட்டை, பைஜாமா, குர்தா, புடவை போன்ற உடைகள் மட்டுமே அணிந்து வரவேண்டும். நவீன உடைகளில் அதாவது ஜீன்ஸ், டீ சட்டை, அரைக் கால் டிரவுசர், ‘லெக்கின்ஸ்’ போன்ற உடைகளில் கோயிலுக்குள் வரக் கூடாது என்று தடை வந்து விட்டது. ‘பக்தர்களுக்கு ஆடைகள் கட்டுப்பாடு பற்றி ஆகமங்களில் ஏதேனும் விதி இருக்கிறதா?’ என்று கேட்டார் ஒரு தோழர். அதற்கு ‘ஆகமங்கள் அர்ச்சகர் களுக்கும் கோயில்களுக்கும் தான்’ என்றார் சிவாச்சாரி. “சட்டை இல்லாமல் திறந்த மேனி யோடு பூணூல் வெளியே தெரியும்படி இருக்க வேண்டும். அதுவும் ஆண்களாக ஒரே ‘குலத்தவராக’ இருக்க வேண்டும்; அப்படித்தானே” என்று எதிர் கேள்வி போட்டார் தோழர். அதாவது பக்தர்களுக்கு மட்டும் ஆடை அணிவதில் கட்டுப்பாடு; அர்ச்சகர்களுக்கு ஆடை இல்லாத கட்டுப்பாடு; அதேபோல் கடவுள் சிலைகளுக்கும் ஆடை இல்லாத கட்டுப்பாடுதான்; நிர்வாணமாக நிற்கும்...