Tagged: அவதூறு

ஏன் துணி விலை உயர்ந்து விட்டது – பெரியார் மீதான அவதூறு

ஏன் துணி விலை உயர்ந்து விட்டது என்று பெரியாரிடம் கேட்டார்களாம்.. அதற்கு பெரியார் பறைச்சி, பள்ளச்சியெல்லாம் ஜாக்கெட் போட ஆரம்பிச்சுட்டாங்க அதான் துணி விலை உயர்ந்து விட்டதுனு சொன்னாராம்.. அந்த செய்தி 12.06.53 அன்று வெளியான விடுதலை நாளிதழில் வெளிவந்த மாதிரி ஒரு போட்டோஷாப் பன்னிவச்சுக்கிட்டு பெரியார் மீது சேற்றை வாரிஇறைப்பவர்களுக்கு 12.06.53 அன்று வெளியான விடுதலை நாளேட்டின் நாலு பக்க செய்தி தாளும் இங்கிருக்கு… நீங்கள் குறிப்பிடுவது போல் விடுதலையில் அந்த செய்தி எங்க இருக்குனு சொல்லுங்க பாக்கலாம்…  

கீழ்த்தரமான மக்கள் தன்மை

கீழ்த்தரமான மக்கள் தன்மை

எந்த அடிப்படை உண்மைகளும் இல்லாமல் தனி நபர்களை குறி வைத்து பரப்பப்படும் அவதூறுகள் பற்றி தந்தை பெரியார் எழுதிய அறிக்கை இது: “சுமார் 70 வருடங்களுக்கு முன் திரு. பா.வெ. மாணிக்க நாயக்கர் அவர்கள் ஈரோடு – கரூர் டிவிஷனில் அசிஸ்டென்ட் இன்ஜினியராக நிய மிக்கப்பட்டபோது, ஒரு ஓவர்ஸீ யரிடம் வேலை கற்க அமர்த்தப் பட்டார். பிறகு அவர் அஸிஸ்டென்ட் இன்ஜினியர் வேலை ஏற்றுக் கொண் டார். அப்போது அந்த ஓவர்ஸீயர் மாணிக்க நாயக்கரின் கீழ் வேலை பார்க்க வேண்டியவரானார். இவரின் நடத்தையை மாணிக்க நாயக்கர் வேலை பழகும்போது தெரிந்து இருந்ததினால், சந்தேகப்பட்ட ஒரு காரியத்தில் கண்டித்தார். இது அந்த ஓவர்ஸீயருக்குப் பிடிக்கவில்லை. ‘நம்மிடம் வேலை பழகின பையன் நம்மைக் கண்டிக்கிறானே!’ என்று கருதி மாணிக்க நாயக்கருக்குப் புத்தி சொல்லுகிற மாதிரி, ‘நீங்கள் சிறு வயது; உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொன்னார். உடனே மாணிக்க நாயக்கர். ‘என்...