Tagged: அறநிலையத்துறை

உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு மற்றொரு சிறப்பான தீர்ப்பு கோயில்களுக்கும் தகவல் உரிமை பெறும் சட்டம் பொருந்தும்

உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு மற்றொரு சிறப்பான தீர்ப்பு கோயில்களுக்கும் தகவல் உரிமை பெறும் சட்டம் பொருந்தும்

இந்து கோயில்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரக்கூடியவையே என்றும் இது தொடர்பாக இந்து அறநிலையத் துறை பிறப்பித்த சுற்றறிக்கை செல்லத்தக்கதே என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு மற்றொரு சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளார். “கோயில்களில் நடக்கும் செயல்பாடுகளை ரகசியமாக்கிவிட்டால்,கோயில் நிர்வாகம் சீரழிந்துவிடும். கோயிலில் நடக்கும் செயல்பாடுகள் தனி நபர் தொடர்புடையது என்று கருதிட முடியாது.  கோயில் ஒரு பொது நிறுவனம். பரம்பரை அறங்காவலர்களின் நிர்வாகத்தின் கீழ் இருப்பதால் மட்டுமே கோயில் பொது நிறுவனம் இல்லை என்றாகிவிடாது. கோயில்கள் அனைத்தும் அறநிலையத் துறையின் கீழ் திட்டவட்டமாகக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கு அரசுப் பணமும் ஒதுக்கப்படுகிறது. கோயில் சடங்குகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொது மக்களிட மிருந்து நன்கொடைகள் திரட்டப்படுகின்றன. இந்த நிலையில் கோயில்களும் தகவல் உரிமை சட்டத்துக்குக் கட்டுப்பட்டவையே” என்று நீதிபதி கே.சந்துரு தீர்ப்பில் கூறியுள்ளார். சென்னை வடபழனியிலுள்ள வெங்கீசுவரர் அழகர் பெருமாள் மற்றும் நாகாத்தம்மாள் கோயில் தேவஸ்தானம் பரம்பரை...