Tagged: அரிதினும் அரிது

உச்சநீதிமன்றம் ஒப்புதல் 9 ஆண்டுகளாக சட்ட விரோதமாக தூக்கு

உச்சநீதிமன்றம் ஒப்புதல் 9 ஆண்டுகளாக சட்ட விரோதமாக தூக்கு

தூக்குத் தண்டனை ஒழிப்பு இயக்கத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தவறான குற்றச்சாட்டு களின் அடிப்படையில் ஒருவரை சாகடித்துவிடும் ஆபத்துகள் நிறைந்த தண்டனை என்பதை உலகம் முழுதும் மனித உரிமையாளர்கள் வற்புறுத்தி வரு கிறார்கள். இதே கருத்தை இப்போது இந்தியாவில் நீதிபதிகளாக இருந்தவர்களும் சுட்டிக்காட்ட முன் வந்துள்ளதோடு, குடியரசுத் தலைவராக அண்மையில் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கும், கடிதம் எழுதியுள்ளனர். இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு கடந்த 2012 ஜூலை 25 ஆம் தேதி 14 முன்னாள் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கையெழுத்திட்டு தனித்தனியாக எழுதியுள்ள முறையீட்டு கடிதங்களில் தற்போது, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 13 பேரின் தூக்குத் தண்டனையை நிறுத்துவதற்கு குடியரசுத் தலைவர் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை (அரசியல் சட்டத்தின் 72வது பிரிவு) பயன்படுத்த முன்வர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். இதில் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி, உச்சநீதி மன்றமே தவறான தீர்ப்புகள் அடிப்படையில்...