Tagged: அம்பானி

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் அணியிலிருந்த மொடக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் ஆர்.எம். பழனிச்சாமி, அமைச்சர் சிதம்பரம் அணியில் சேர்ந்தார்.  – தினமலர் செய்தி இனி எதிர்காலத்தில் இளங்கோவன் அணி யுடன் கூட்டணியோ, தொகுதிப் பங்கீடோ கிடையாது என்று பேட்டி அளித்தாரா? தன்னை ஒரு டீக்கடைக்காரர் என்று கூறிக் கொள்ளும் மோடிக்கு, ஹெலிகாப்டரில் பயணம் செய்ய எங்கிருந்து பணம் வந்தது?  – கெஜ்ரிவால் கேள்வி இது என்ன கேள்வி? ‘சாமான்யன்’ மோடிக்கு, ‘சாமான்யர்’ அம்பானி உதவிடக் கூடாதா? மனிதாபிமானம் இல்லாமல் பேசக் கூடாது. திருவனந்தபுரம் விரைவு ரயிலில் பயணம் செய்த முதியவரின் கையை எலி கடித்ததால் ரயில் ஈரோட்டில் 30 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டது.    – செய்தி எல்லா இரயில்களிலும் எலிகளுக்காக நான்கு ஏ.சி. கோச்சுகளை தனியாக ஒதுக்கியிருந்தா, இந்தப் பிரச்சினை வந்திருக்காதுல்ல. ஒருபோதும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க முடியாது.    – தா. பாண்டியன் ஆமாம்! விட்டுக் கொடுக்கவே கூடாது. அது சரி; நீங்கள்...

பார்ப்பன-பனியா ஆதிக்கம்: அம்பலப்படுத்துகிறார் அருந்ததிராய்

பார்ப்பன-பனியா ஆதிக்கம்: அம்பலப்படுத்துகிறார் அருந்ததிராய்

1936இல் லாகூரில் ஜாதி ஒழிப்பு சங்கம், ஜாதி குறித்து அம்பேத்கரை பேச அழைத்தது. கடுமையான உழைப்பில் அம்பேத்கர் தயாரித்த ஆழமான அந்த ஆய்வுரையில் பார்ப்பனர், இந்து மதம் தொடர்பான கருத்துகளை நீக்க வேண்டும் என்று சங்கத்தார் கூறியதை ஏற்காத அம்பேத்கர், உரை நிகழ்த்த மறுத்துவிட்டார். வரலாற்று சிறப்பு மிக்க அந்த உரையை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார். ‘ஜாதியை ஒழிக்க வழி’ என்ற தலைப்பில் சுயமரியாதை இயக்க பதிப்பாக வெளிவந்தது. பல நூறு பதிப்புகளைக் கண்ட அந்த ஆங்கில நூலை, அண்மையில் நவயாண பதிப்பகம் வெளியிட்டது. இதற்கு உலகப் புகழ் பெற்ற புக்கர் விருது பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய், 200 பக்க அளவில் விரிவான முன்னுரை எழுதியுள்ளார். அரசியல் பொருளாதார ஊடகத் துறைகளில், தலித் மக்கள் புறக்கணிக்கப்படு வதற்கும், பார்ப்பன பனியா ஆதிக்கம் தொடர் வதற்கும் ஜாதியமைப்பே காரணம் என்கிறார் அருந்ததிராய். அவர் எழுதிய முன்னுரையி லிருந்து ஒரு...