Tagged: அமாவாசை

அமாவாசையில் பிறந்த பிள்ளை

அமாவாசையில் பிறந்த பிள்ளை

மாடு செத்தால் எடுத்துப் போய்தின்று விடுகிறார்கள். குதிரை செத்தால் சாப்பிடாமல் புதைதது விடுகிறார்கள். இவைகள் சொர்க்கத்தில் இருக்கின்றன; நரகத்தில் இருக்கின்றன என்று எவரும் கருதுவதில்லை. ஆனால் இந்த முட்டாள்தனத்தை மனிதனுக்குத்தான் ஒட்ட வைத்து விட்டார்கள்.                                                   – பெரியார், ‘விடுதலை’ 22.11.1972 பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் சாதகம் பார்க்கிறேன் என்கிறான். அந்தச் சாதகம் பார்ப்பவனிடம் ஒரு குதிரையின் சாதகத்தையும் கழுதையின் சாதகத்தையும் கொடுத்துப் பொருத்தம் பார் என்றால் இது குதிரைச் சாதகம், இது கழுதைச் சாதகம் என்று கூற மாட்டானே! உடனே பொருத்தம் பார்த்து சரியாக இருக்கிறது என்றுதானே கூறுவான்? குதிரை, கழுதைச் சாதகத்துக்கு வித்தியாசம் தெரியாத இவன் எப்படி மனிதனுக்குப் பொருத்தம் கூற முடியும் என்று நம் மக்கள் கொஞ்சம் கூடச் சிந்திப்பதில்லையே!                                             – பெரியார், ‘விடுதலை’ 9.10.1964   அமாவாசையில் பிறந்த பிள்ளை திருடும் என்று சோசியத்தில் நம்பிக்கையுள்ளவன் கருதினாலும் அவன் வீட்டில் ஒரு அமாவாசையில் பிறந்த ஒருவன்...

இந்து மதப் பண்டிகைகள்

சொர்க்கவாசல் மகிமை மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணச்செலவு செய்து கொண்டு போவதும்,  தை மாதம் வந்தால் பூசம் என்று காவடிகளைத் றீக்கிக் கொண்டு  பழனி முதலிய மலைகளுக்குப் போவதும், பொய்யையும் புளுகையும் காவடிக் கதையாய்ச்  சொல்வதும், அறுத்துச் சமைத்த பாம்பும், கோழியும், மீனும் உயிர் பெற்று விட்டது என்பதும், மண் சர்க்கரை ஆகிவிட்டது என்ப தும், வெட்டித் துண்டாக்கப்பட்ட  குழந்தை உயிர்பெற்று விட்டது என்பதும் இதுபோல் இன்னும் பல பொய்களை வெட்க மில்லாமல், சொல்லுவதும், அழுக்குக் குட்டைகளில் குளித்தும், குடித்தும்  `பஞ்சாமிர்தம்’ எனும் அசிங்கத்தை உண்டும், அதனால் காலரா போன்ற கொடிய நோய்க்கு இரையாவதும் நாம் கண்டது தானே! அசிங்கம், ஆபாசம், அறியாமை இவைதானே நமது பண்டிகைகளாக இருந்து வருகின்றன? சீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு என்று கதை அளக்கிறார்களே,  அதன் தாத்பரியத்தைக் கேளுங்கள் : நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோயிலின்...