Tagged: அபிஷேகத் தீர்த்தம்

அபிஷேகத் தீர்த்தமா… அய்யய்யோ ஆபத்து!

அபிஷேகத் தீர்த்தமா… அய்யய்யோ ஆபத்து!

‘ஆன் லைன்’ வழியாக ‘ஆர்டர்’ செய்தால் ‘கங்கை நீர் பாக்கெட்’ அஞ்சலகம் வழியாக இல்லங்களைத் தேடி வரும் திட்டத்தை பா.ஜ.க. ஆட்சி தொடங்கப் போகிறதாம். உலகிலேயே மிகவும் ஆபத்தானது என்று அறிவிக்கப்பட்டுள்ள ‘கங்கை’ நீர் புனிதமானது என்று  மக்களை நம்ப வைக்கிறது மோடி ஆட்சி. கங்கையை சுத்தப்படுத்தப் போவதாக ரூ. 25000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்காகவே ஒரு அமைச்சர் முழு நேர வேலையாக அலைந்து கொண்டிருக்கிறார். நோய்க் கிருமிகளும் கழிவுகளும் நிறைந்து சாக்கடையாக மாறி நிற்கிறது கங்கை நீர். இங்கே அன்றாடம் ஆயிரக்கணக்கான பிணங்கள் எரியூட்டப்படுகின்றன. அவற்றின் சாம்பல் கரைக்கப்படுவது இந்த கங்கையில்தான். கங்கையில் கரைப்பதற்காகவே வெளியூர் களிலிருந்து ‘சாம்பல்கள்’ கொண்டு வரப்படுகின்றன. இறந்துபோன பிணங்களை எரியூட்டாமல் அப்படியே கங்கையில் வீசும் பழக்கமும் தொடருகிறது. கங்கையில் சாம்பலை கரைத்தால் உடனே ‘மோட்ச’த்தில் அவர்களுக்கான இடம் பதிவு செய்யப்பட்டுவிடுகிறது என்ற மூட நம்பிக்கையே இதற்குக் காரணம். கங்கை நதிக்கரையோரம் உள்ள நகரங்களிலிருந்து...