119 பேர் மரணமடைந்த குண்டுவெடிப்புகளுக்கு திட்டமிட்டேன்: அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்
ஒப்புதல் வாக்கு மூலத்துக்குப் பிறகும் விடுதலையான பயங்கரவாதியின் கதை ‘என்னை கோபால் கோட்சே இருந்த அதே கொட்டடியில் வைத்திருக்கிறார்கள்’ என்று பெருமையாக சொல்லிக் கொண்டார் அசீமானந்தா. இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் ரம்சான் தொழுகையில் 5000 இஸ்லாமியர்கள் ஈடுபட்டிருந்த போது குண்டு வெடித்தது. இதில் 3 பேர் இறந்தனர் 17 பேர் படுகாயமடைந்தனர். வழக்கம்போல் இதில் இஸ்லாமியர்களே குற்றவாளி என்று கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு குண்டு வைத்தது இந்து தீவிரவாதிகள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பது கண்டறியப்பட்டது. தேசிய புலனாய்வு நிறுவனம் இந்த வழக்கை விசாரித்தது. சிறப்பு நீதிமன்றம் வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.காரர், அசீமானந்தாவை விடுதலை செய்து விட்டு 3 பேரை மட்டும் குற்றவாளி என்று கூறியிருக்கிறது. அசீமானந்தா டெல்லி உயர்நீதி மன்றத்தில் பல தாக்குதல்களை நானே திட்டமிட்டேன் என்று ஒப்புதல் வாக்குமூலமே தந்திருந்தார். ‘காரவான்’ ஆங்கில இதழுக்காக லீனா கீதா ரெங்கநாத் எனும் செய்தியாளர் தனது குழுவினருடன்...