Tagged: அகமணமுறை

மேட்டூரில் முப்பெரும் நிகழ்வுகள்

மேட்டூரில் முப்பெரும் நிகழ்வுகள்

மேட்டூரில் 25.2.2014 அன்று மாலை முப்பெரும் விழாக்கள் சிறப்புடன் நடந்தன. ‘அகமணமுறையை அகற்றுவோம்; ஆரோக்கிய சமூகத்தை வளர்ப்போம்’ என்ற முழக்கத்தை முன் வைத்து கழகம் நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு; ‘புரட்சிப் பெரியார் முழக்கம்-2014’ஆம் ஆண்டு மலர் வெளியீடு; ஒரே ஜாதிக்குள் நிகழும் இணையர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் சந்திக்கும் உடல், மனநலக் கோளாறுகளை அறிவியல் ரீதியாக மருத்துவர்கள் முன் வைத்த கருத்துகளைத் திரட்டி உருவாக்கப்பட்ட ஆவணப் படம் திரையீடு என்ற முப்பெரும் நிகழ்வுகள் நடைபெற்றன. மாலை 5.30 மணியளவில் மேட்டூர் டி.கே.ஆர். குழுவினரின் ஜாதி எதிர்ப்புப் பாடல் களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து மேட்டூர் பெரியார் பிஞ்சுகள் நடத்திய கலை நிகழ்ச்சிகள், பரப்புரை பயணத்தில் அகமண முறைக்கு எதிரான கருத்துகளை விளக்கிடும் திராவிடர் கலைக் குழுவினர் நடத்திய நாடகம் ஆகிய நிகழ்வுகள் அனைவரையும் கவர்ந்தன. கருந்திணை சார்பில் தயாரிக்கப்பட்ட அறிவியல் விளக்கங்களைக் கொண்ட ஆவணப் படம் திரையிடப்பட்டது. 40 நிமிடங்கள் ஓடிய...

‘அகமணமுறை’ பாதிப்புகளை விளக்கிடும் ‘தீவரைவு’ ஆவணப்படம் திரையீடு

‘அகமணமுறை’ பாதிப்புகளை விளக்கிடும் ‘தீவரைவு’ ஆவணப்படம் திரையீடு

கருந்திணை தயாரிப்பில் தோழர் பூங்குழலி இயக்கத்தில் உருவான “தீவரைவு” ஆவணப் படத்தின் திரையிடல் கடந்த 9-05-2014, வெள்ளிக் கிழமை மாலை 6.30 மணிக்கு, சென்னை பனுவல் புத்தகக் கடை அரங்கில் நடைபெற்றது. நமது பண்பாட்டில் உறவுகளை நிலை நிறுத்துவதற்கும், புதிய உறவுகளை உருவாக்கு வதற்கும் திருமணம் ஒரு முக்கிய களமாக இருக் கிறது. இந்த திருமணமுறையானது உறவுகளை மட்டுமல்ல, ஜாதியையும் நிலைநிறுத்தி வருகிறது. பல நூற்றாண்டுகளாக ஜாதிக்குள் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் மண உறவுகள், சமுதாயத்தில் உடல் ஊனம், மன ஊனம், மருத்துவ ஊனங்களை அதிகமாக்கி வருகிறது. தொடர்ச்சியாக ஜாதிக்குள் நடைபெற்று வரும் திருமண முறையால், உருவாகும் அடுத்தத் தலைமுறை, உளவியல், உடலியல் ரீதியாக எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை மருத்துவ, மரபணு மற்றும் மானுடவியல் அறிஞர்களின் மூலம் விளக்குகிறது இந்த ஆவணப்படம். கருந்திணையும் பனுவலும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இத்திரையிடல் நிகழ்வில் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவரும், இந்த...