Tagged: அகண்ட பாரதம்

ஆர்.எஸ்.எஸ். பேசும் ‘அகண்ட பாரதம்’

ஆர்.எஸ்.எஸ். பேசும் ‘அகண்ட பாரதம்’

ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகமான நாக்பூரில், இந்திய வரைபடம் மாட்டப்பட வில்லை. அங்கே மாட்டப்பட்டிருப்பது, ‘அகண்ட பாரதத்தின்’ வரைபடம். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மியான்மார் ஆகிய நாடுகளை ஒரே தேசமாக சித்தரிக்கிறது, அந்த வரைபடம். இந்தியாவின் பிரதமர் மோடி மேற்கொண்ட திடீர் பாகிஸ்தான் பயணத்தின்போது உலகப் புகழ் பெற்ற அல் அஜிரா தொலைக்காட்சி, பா.ஜ.க. பொதுச் செயலாளர்களில் ஒருவரான இராம் மாதவ் என்ற பார்ப்பனரின் பேட்டியை ஒளி பரப்பியது. ‘பாகிஸ்தான் நாட்டுக்கு இறையாண்மை கிடையாது. அது இந்தியாவின் பகுதி’ என்று கூறி, அகண்ட பாரதத்தை நியாயப் படுத்தினார் இராம் மாதவ். ‘அகண்ட பாரத்’ என்ற ‘பாரத் வர்ஷா’ – கற்பனை உணர்வு அல்ல. இந்தியாவின் எல்லைகள் ‘பாரத் வர்ஷாவாக’ விரிவடைய வேண்டும் என்பதே தங்களின் இலட்சியம் என்று அந்த பேட்டியில் அவர் கூறினார். (இந்தியாவில் ‘தேசிய’ ஏடுகள் எதுவும் இந்த  பேட்டிச் செய்தியை வெளியிடவில்லை) இந்து ‘பாரத் வர்ஷா’ கொள்கையை 1934இல்...