Tagged: ஃபாரூக்

பெரியாரிஸ்ட் ஃபாரூக் படுகொலை

கோவை திராவிடர் விடுதலைக் கழக தோழர் ஃபாரூக் கடவுள் மதமறுப்பாளராக செயல்பட்டார் என்பதற்காகவே இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொலை செய்யப்பட்ட நிகழ்வு தமிழகத்தில் அதிர்ச்சியையும் சமூக வலைதளங்களில் கடும் விவாதங்களையும் உருவாக்கிஇருக்கிறது; பெரியார் இயக்கத்துக்கும் -இஸ்லாமிய சமூகத்துக்கும் வரலாற்று ரீதியான உறவு தொடர்ந்து வருகிறது ; கடவுள் – மதமறுப்பாளர்களான பெரியார் இயக்க மேடைகளில்பேச அழைக்கப்படும் இஸ்லாமியர்கள்“ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் ” கடவுள் மறுப்பாளர்களுக்கும் சேர்த்து வணங்கித்தான் பேச்சைத் தொடங்கு வார்கள்; கருத்துச் சுதந்திரத்தை பெரியார் மேடைகள் அங்கீகரிக்கவே செய்கின்றன. பார்ப்பனிய வர்ணாஸ்ரமக் கட்டமைப்புக்குள் இயங்கும் வேதமதமான இந்து மதம் -ஜாதி, தீண்டாமை அடையாளங்களை பிரிக்கமுடியாமல் -சதையும் நகமுமாக தன்னிடம் இணைத்துக் கொண்டிருக்கும், நிலையில் தீண்டாமையை மறுக்கும் மதமாக இஸ்லாம் மட்டுமே இருந்தது ; எனவேதான்பெரியார்ஒடுக்கப்பட்டசமூகத்தை தீண்டாமைக் கொடுமையிலிருந்து உடனடியாக விடுவித்துக் கொள்ளும் வழிமுறைகளில் ஒன்றாக இஸ்லாமை பரிந்துரைத்தார் ; தீண்டாமை ஒழிப்பு என்ற ஒரு காரணத்தைத் தவிர , இஸ்லாம்...