மேட்டூர் கழக மூத்த ஓவியர் சேகர் முடிவெய்தினார்.

மேட்டூர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மூத்த ஓவியர் சந்திரசேகர் (எ) சேகர் கடந்த 1.7.2015 அன்று உடல்நலம் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் முடிவெய்தினார். இவருக்கு வயது (54). மேட்டூரில் திராவிடர் கழகம் தொடங்கப்பட்டு, வளர்ந்து வந்த நிலையில் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு கழகம் வளர்வதற்கு இவரின் சுவரெழுத்தும், தட்டி விளம்பரமும் முழு வீச்சாக அன்று இருந்தது. குறிப்பாக கடவுள் கதைகள், வேதங்களில் வரும் கடவுள் தொடர்பான கடவுள் கதைகளுக்கேற்ப கார்ட்டூன்கள் வரைவதில் திறமையானவர். அந்த காலகட்டங்களில் இவர் வரையும் கடவுள் கார்ட்டூன்கள் அடங்கிய தட்டி பிரச்சாரம் மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு பரபரப்பை உண்டாக்கும். இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், தமிழ் பிரபா, தமிழ் நிலா என்ற இரு மகள்களும் உண்டு. கழகப் பொறுப்பாளர்களும், கழகத் தோழர்களும் கழகச் சார்பில் இறுதி மரியாதை செலுத்தினர்.

பெரியார் முழக்கம் 16072015 இதழ்

You may also like...