கைவண்டி கருப்பு முடிவெய்தினார்.

எப்போதும் கருஞ்சட்டையுடன் காட்சியளிக்கும் உழைக்கும் தோழர் மதுரை கைவண்டி கருப்பு (75), 12.7.2015 அன்று காலை முடிவெய்தினார். திராவிடர் கழகத்தில் தொடங்கி, திராவிடர் விடுதலைக் கழகம் வரை பெரியார் தொண்டராகவே வாழ்ந்தவர். அவர் பொள்ளாச்சியில் வாழ்ந்த காலத்தில் எப்போதும் சுமை இழுக்கும் கைவண்டியுடன் உழைத்ததால் கைவண்டி கருப்பு என்று பெரியாரால் அழைக்கப்பட்டவர். கழக நிகழ்ச்சிகளில் தமது துணைவியாரோடு பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த சில மாதங்களாக நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் மதுரை மஞ்சள்மேடு குடியிருப்பில் தனது இல்லத்தில் முடிவெய்தினார். கழக சார்பில் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

பெரியார் முழக்கம் 16072015 இதழ்

You may also like...