தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுக்கவரும் இந்த யாத்திரையை அனுமதிக்கக் கூடாது

இதற்கு முன்பு இரண்டு முறை இந்து அமைப்புகள் ரத யாத்திரையை நடத்தியுள்ளனர். குஜராத் மாநிலம், சோமநாதபுரத்திலிருந்து அத்வானி தொடங்கிய ரத யாத்திரை. அடுத்து, கன்னியாகுமரியிலிருந்து டெல்லி வரை முரளி மனோகர் ஜோஷி சென்ற ரத யாத்திரை. இந்த இரண்டு ரத யாத்திரைகளும் வன்முறையைத் தூண்டிவிட்டு சமுதாய பதற்றத்தை ஏற்படுத்தியவைதான். ஒன்று பாபர் மசூதி இடிப்பில் முடிந்தது.

இப்போதும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள சூழலில் வட இந்தியாவில் உள்ள அல்லது இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மக்களின் மன உணர்வை வாக்குகளாக மாற்றும் முயற்சியாகத் தான் இதைப் பார்க்கிறோம். இந்தப் பயணம் வந்துகொண்டிருக்கிற எல்லா இடங்களிலும் பாஜகவும், ஆர்எஸ்.எஸ்ஸும்தான் ஆதரவாக இருந்து கொண்டிருக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து எல்லா மாநிலங்களின் டிஜிபிகளுக்கும் ரத யாத்திரை குழுவுக்கு அனுமதியும் பாதுகாப்பும் அளிக்க வேண்டுமென்று அறிக்கை வந்ததாகவும் செய்திகள் வருகின்றன. தமிழ்நாட்டில் நிலவுகிற பொது அமைதி, எல்லாரோடும் இணங்கி இருக்கிற ஓர் இணக்கமான சூழலை உடைத்து இஸ்லாமியர்களைத் தனியாகப் பிரித்து இந்து பெரும்பான்மையை மட்டும் தனியாகக் காட்டுகின்ற ஒரு முயற்சிதான் இது. அதனுடைய வெளிப்பாடாகத்தான் இந்தப் பயணத்தை பார்க்கிறேன். இதை எதிர்க்கும் வகையில் காவி பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக இந்த யாத்திரை கேரளாவிலிருந்து தமிழகத்துக்குள் நுழையும்போது மறிக்கவுள்ளோம். தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுக்கவரும் இந்த யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்ற அடிப்படையில் இதை எதிர்க்கிறோம்.

கொளத்தூர் மணி

தலைவர்

திராவிடர் விடுதலைக் கழகம்

You may also like...