செய்நன்றி கொன்றவன் என்ற பழிச்சொல்லில் இருந்து மீள வாய்ப்பளியுங்கள் – தோழர் கொளத்தூர் மணி எழுத்தாளர் ஏகலைவனுக்கு கோரிக்கை

ஏகலைவன் அவர்களுக்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் பதில்.
——————————

தோழர், நீங்கள் கூறியதைப் போலன்றி இரவிச்சந்திரனன், நளினியைத் தவிர அனைவரையும் சிறையில் சந்திதுள்ளேன். (மேலும் நான் ஏதேனும் நூல் எழுதுவதாய் இருந்தால் அடிக்கடி சந்திக்கலாம்) மரணதண்டனைக் குறைப்புக்குப் பின்னர் மனுவில் பெயர் எழுதிக் கொடுத்தும் பலமுறை முருகனும் சாந்தனும் சந்திக்க வந்ததில்லை. கடந்த மூன்றாண்டுகளாக சிறைக்கு சென்று ‘யாரையும்’ பார்ப்பதில்லை என்பது உண்மையே, பல காரணங்கள் அதற்குண்டு.

நீங்கள் கூறியுள்ளவாறு கவுந்தபாடி பேரறிவாளன் என்னிடம் புத்தகத்தைக் கொடுக்கவில்லை. மீண்டும் ஒருமுறை அவரிடமே உறுதிசெய்து கொள்ளுங்கள்.

//தாங்கள் மிகப்பெரும் தலைவர். இதில் உள்ள எழுவரையுமே சந்தித்தீர்களா. யார் யாரை? எத்தனைமுறை என்றெல்லாம் நான் கேட்க முடியாது. அது தேவையற்றதும் கூட.//
என்னைத்தான் கேட்கமுடியாது. அவர்களையே கேட்டிருக்கலாமே? பார்க்கப்போகாத இந்த காலகட்டத்தில்கூட அவர்களுக்காக வெளியே இருந்து என்னென்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை அவர்களே சொல்வார்களே!

பெரியார் பெயரைக் குறிப்பிடாதது தொடர்பாக பெரியார்மீது நீங்கள் எழுதியிருந்த வரலாற்று விளக்கங்கள் குறித்து உங்கள் பதிவில் ஏதும் இல்லை.

இவ்வளவு நாள் இவற்றையெல்லாம் அலட்சியப்படுத்திப் போய்க்கொண்டிருந்த நான் இப்போது எழுத நேர்ந்ததற்கு கவுசல்யா பற்றி நீங்கள் எழுதிய வன்மம் நிறைந்த பதிவே காரணம் என நான் குறிப்பிட்டிருந்தேன். அதனை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.

// இன்று உங்களுக்கு ஆயிரம் பேர் இருக்கலாம் தோழர். அன்று நெருக்கடியான நேரத்தில் உடனிருந்து ஒத்துழைத்த ஒரு சிலரில் இந்த ஏகலைவனும் ஒருவர் என்பதை மனசாட்சியில் இறுத்தி எழுதுங்கள்//

இந்த வரிகளை சற்று விளக்கினால் செய்நன்றி கொன்றவன் என்ற பழிச்சொல்லில் இருந்து மீள்வரற்கு எனக்கு வாய்ப்பளித்ததாக இருக்கும். இல்லாவிட்டால் உங்களுக்கு வீண்வாய் சவடால் என்ற அவச்சொல்லும் வந்துவிடலாம்.கொஞ்சம் விளக்கமாக பொதுவெளியிலேயே எழுதுங்கள்.

மேலும் தமிழனத் தலைவருக்கு ….
எனத் தலைப்பிட்டு விட்டு, தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்கு என பதிவிட்டுள்ளீர்கள். வேறு யாரையாவது மனதில் எண்ணிக் கொண்டு எழுதத் தொடங்கினீர்களா?

– கொளத்தூர் தா.செ.மணி,
மேட்டூர்,
18.03.2018.

You may also like...