கடற்கரையில் நடந்த கழகத் தோழர்கள் சந்திப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட திருவான்மியூர் பகுதி கலந்துரையாடல் கூட்டம் நா.விவேக் (தென் சென்னை மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்) தலைமையில் 20.08.2017 மாலை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. கழகத்தில் புதிதாக இணைத்துக் கொள்ள முன் வந்த இளைஞர்களுக்கு இயக்கக் கொள்கை, நடைமுறைகள் குறித்து விளக்கிட பெசன்ட் நகர் கடற்கரையில் இந்த சந்திப்பை தோழர்கள் ஏற்பாடு செய்தனர்.  முதல் முறையாக திருவான்மியூர் பகுதியில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்திற்கு பகுதி சார்ந்த தோழர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். இதில் இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) மற்றும் அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) தோழர்களிடம்  பெரியாரிய கொள்கைகளை எடுத்துரைத்து தோழர்களின் கேள்விகளுக்கும் தெளிவான விளக்கமளித்தனர். செயற்பாடுகள், களப்பணிகள் போன்றவைகளை குறித்தும் கலந்துரையாடினார்கள்.

பெரியார் முழக்கம் 31082017 இதழ்

You may also like...