கயத்தாறில் தூக்கு தண்டனை எதிர்ப்புக் கூட்டம்

மரண தண்டனைக்கு எதிரான விளக்கப் பொதுக் கூட்டம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறில் பால் பண்ணை எதிரில் கழக சார்பில் 3.12.11 அன்று நடந்தது. மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் வே.பால்ராசு, மாவட்டச் செயலாளர் கோ. அ. குமார், ம.தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் கணபதி பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். கழக ஆலோசனைக் குழு உறுப்பினர் பால் பிரபாகரன் சிறப்புரையாற்றினார். நிகழ்வில், மாவட்ட பொருளாளர் க.மதன், மாநகர தலைவர் சா.த. பிரபாகரன், மாநகர துணைத் தலைவர் ரவிசங்கர், மாநகரச் செயலாளர் பால். அறிவழகன், நெல்லை மாவட்டச் செயலாளர் சி.ஆ.காசிராசன், தோழர்கள் சண்முகராசு, ம.திலீபன், இரா.சிங்கணன் மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள், தமிழ்ப் புலிகள் அமைப்பின் நெல்லை மாயா ஆகியோரும், ம.தி.மு.க. தோழர்களும் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட இணைச் செயலாளர் ச.கா.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 05012012 இதழ்

You may also like...