ஈழ ஏதிலியர் உரிமை: கையெழுத்து இயக்கம் தொடங்கியது

தமிழீழ ஏதிலியர் (அகதிகள்) உரிமைக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் 27 08 2018 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகில் 10 இலட்சம் கையெழுத்து இயக்கம் திராவிடர் விடுதலைகழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தொடங்கியது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன், பேராசிரியர் சரசுவதி (நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்), செந்தில் (இளம் தமிழகம்), பாரதி (த.தே.வி.இ.), அருண பாரதி (த.தே.பே), சேகர் (தொ.மு.இ.), வன்னி அரசு (வி.சி.), இயக்குனர் மு. களஞ்சியம், இயக்குநர் புகழேந்தி மற்றும் தமிழ் அமைப்புகளின் தலைவர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 01092016 இதழ்

You may also like...