வினாயகன் அரசியல் ஊர்வலத்துக்கு எதிராக சென்னையில் பெரியார் கைத்தடி ஊர்வலம்

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பில் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் 19.08.2016 மாலை 5:30 மணியளவில் கழகத் தலைமை அலுவலகத்தில் நடை பெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் வருகின்ற 28, 29, 30, 31  தேதிகளில் நடைபெறவுள்ள பரப்புரைப் பயணம், விநாயகர் ஊர்வல எதிர்ப்பு, பெரியார் கைத்தடி ஊர்வலம், விநாயகர் ஊர்வல முறைகேடு பற்றி சமூக வலைதளங் களில் கவனம் ஈர்த்தல் மற்றும் காவல்துறையில் மனு அளித்தல், அய்யா பிறந்தநாள் நிகழ்வுகள் என அடுத்தக்கட்ட நிகழ்வுகளை பற்றி விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.

சென்னை மாவட்ட பொறுப் பாளர்கள், பகுதி பொறுப்பாளர்கள், தோழர்களும் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 25082016 இதழ்

You may also like...