வினாக்கள்… விடைகள்…!

கோயில் கருவறைக்குள் உள்ள சிலை மந்திரத்தால் உயிரூட்டப்பட்டது; பாதுகாப்புக்காக கருவறையை அற நிலையத் துறை வீடியோ படம் எடுப்பது, பக்தர்களைப் புண்படுத்துவதாகும்.   – அர்ச்சகர் சங்கம் எதிர்ப்பு

ஆகம விதிகளில் திருத்தம் கொண்டு வந்து கருவறைக்குள் ஒரு கண்காணிப்புக் காமராவைப் பொருத்தி விடலாமே!

குரங்கு, எலி, பூனைகளுக்கு காபிப் பழத்தை உணவாகக் கொடுத்து, அவை மலம் கழிக்கும் போது வெளியாகும் கொட்டைகள்தான் உயர்ந்த ‘காபி’ ரகமாக தயாரிக்கப்படுகிறது.  – ‘இந்து’ தமிழ் ஏடு செய்தி

அக்கிரகாரத்துல ‘பேஷா’ மணக்கும் காபி வாசனை – ரகசியம், இப்பதாண்டா அம்பி புரியறது!

ஜப்பான் நாட்டில் திருமணங்களை நடத்தி வைக்க புரோகிதர்களாக ரோபோக்களை (எந்திர மனிதர்களை) பயன்படுத்து கிறார்கள்.  – ‘தினமலர்’ செய்தி

அந்த ரோபோக்களை எங்க நாட்டுக்கு அனுப்பிடா தீங்க… ஓமகுண்டம் புகை மூட்டத்துல ஓட்டம் புடுச்சிடும்.

செவ்வாய்க் கிரகத்துக்கு இந்தியா விண்கலம் அனுப்பிய அடுத்த 15 நாளில் அமெரிக்காவும் அனுப்பியுள்ளது.  – செய்தி

இரண்டு கலங்களும் நாடாளுமன்றத்துக்கு தெரியாமல் ரகசிய ஒப்பந்தம் எதையாவது போடாமல் இருந்தால் சரி.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் காவிரித்தாய் கோயில் கட்டப்பட்டு, குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடந்தது. – செய்தி

நன்னீராட்டுவதற்கு தண்ணீர் காவிரியிலிருந்து கிடைத்ததா? அல்லது கங்கையி லிருந்து கொண்டு வந்தீர்களா?

தடுப்புக் காவல் சட்டங்களில் கைது செய்யப்பட் டுள்ளதில் இந்தியாவிலேயே முதலிடம் தமிழ்நாட்டுக்கு (523 பேர்), இரண்டாவது இடம் குஜராத்.  – தேசியக் குற்ற ஆவண மய்யம்

முந்துகிறார்; முந்துகிறார்; பிரதமர் பதவிப் போட்டியில் மோடியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஜெயலலிதா முந்து கிறார்.

ஆதார் அட்டைகளில் அடங்கியுள்ள அனைத்து தகவல்களும் அமெரிக்க உளவு நிறுவனத்துக்குப் போகிறது.  – மார்க்சி°ட் கட்சி குற்றச்சாட்டு

பயப்படவேண்டாம்; அமெரிக்க உளவு நிறுவனம் அட்டைகளை சரிபார்த்து உறுதி செய்தால், பிறகு நாம் இந்தியக் குடிமக்கள் தான் என்பதை இந்தியாவும் அங்கீகரித்து விடும்! அவ்வளவுதான்!

கங்கை ஆற்றில் சாமி சிலைகளைக் கரைப்பதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி அலகாபாத் உயர்நீதி மன்றம் தடை.  – செய்தி

ஆமாம்! இப்படி கரைப்பதால்தான் கங்கை அழுக்காகிறது; அதே போல் பக்தர்கள் முழுக்குப் போட்டு செய்த ‘பாவங்’களைக் கரைப்பதற்கும் தடை போட்டால் கங்கை இன்னும் சுத்தமாகிவிடும்.

கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு; சத்தியமூர்த்தி பவனில் மகிழ்ச்சி; உற்சாகம். – செய்தி

இருக்கத்தானே செய்யும் அவர்கள் என்ன தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தா, மகிழ்ச்சி அடைய முடியும்? நன்றாக கொண்டா டுங்கள்.

சர்வதேச ஊழல் ஒழிப்பு தினத்த முன்னிட்டு (டிச.9) பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். – செய்தி

சட்டசபை, நாடாளுமன்றத்தில் உறுதிமொழி ஏற்றிருந்தால் சபையை அவமதித்த குற்றமாகியிருக்கும்; நல்லவேளை பள்ளிகளோடு நிறுத்திக் கொண்டார்கள்!

ஏற்காடு இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க அமோக வெற்றி. எதிர்க்கட்சி தி.மு.க.வுக்கு டெபாசிட் தொகை கிடைத்தது.  – செய்தி

எதிர்கட்சிக்கு டெபாசிட் கிடைக்கச் செய்திருப்பதெல் லாம் ஆளுங்கட்சிக்கு ஒரு வெற்றியா? அதிலெல்லாம் அழகிரி சாதனையை முறியடிக்கவே முடியாது, சார்!

பெரியார் முழக்கம் இதழ் 12122013

You may also like...