வினாக்கள்… விடைகள்…

ஆக்ராவில் மோடி அமர்ந்திருந்த நாற்காலி, கூட்டத்தில் 4.5 லட்சத் துக்கு ஏலம் போனது.                – செய்தி

நாற்காலியோட நிறுத்துங்க; மோடியையும் சேர்த்து ஏலம் விட்டுடாதீங்க..

இந்தியாவில் நகரங்களில் 70 சதவீதம் பேர் ஏழ்மையில் வாழ்வதாக அரசு நியமித்த எ°.ஆர். ஹஷீம் குழு தந்த அறிக்கையை ஓராண்டு காலமாக மத்திய அரசு முடக்கிப் போட்டு விட்டது.   – செய்தி

எப்படியோ ஏழ்மையை முடக்கிப் போட்டிருக்கிறார்களா, இல்லையா? எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கக் கூடாது.

மதங்கள் நடத்தும் புனிதச் சடங்கு களினால் எழும் புகை மூட்டங் களால் பசுமை இல்லங்கள் பாதிக் கப்பட்டு, இமயமலைப் பனிக்கட்டி களும் உருகி, பூமி வெப்பமடைய காரணமாகிவிடுகின்றன.    – ஆய்வாளர்கள் தகவல்

கவலைப்பட வேண்டாம்; பூமியைக் காப்பாத்துறதுக்கும் யாகம் கைவசம் இருக்கு

முடிகாணிக்கை வருவாயை அதிகரிப்பது குறித்து திருமலை தேவ°தானம் தீவிர ஆய்வு.   – செய்தி

பக்தர்களுக்கு நீண்ட கூந்தல் வளர அமேசான் காடுகளின்       மூலிகைகளைக் கொண்டு வந்து எண்ணெய் தயாரிப்பது பற்றி தேவ°தானம் பரிசீலிக்கலாமே!

திருப்பூரில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சந்தையில் வெங்காயம் திருட முயன்ற இருவர் கைது . – செய்தி

அய்யய்யோ… இது திருட்டு வழக்கில்லையே! தேசத் துரோக குற்றமாச்சே….!

கிரிக்கெட்டில் கோடி கோடியாக பொருள் ஈட்டிய – சமூகத்துக்கு எந்த சேவையும் செய்யாத சச்சினுக்கு ‘பாரத ரத்னா’ விருதா?  – நீதிமன்றத்தில் வழக்கு

அப்படி சேவை எதுவும் செய்யா மல், சமூகத்தைக் காப்பாற்றியதற் காகத்தான் இந்த விருது!

1987 இல் ‘தண்ட’த்தை மடத் திலேயே விட்டுவிட்டு, தலை மறைவானவர் ஜெயேந்திரர். – தினமலர் செய்தி

‘சாமி’கள் மவுன விரதத்தைப் போல அது ‘தலைமறைவு விரதம்’ தெரிஞ்சுக்குங்க!

மாடுகளிடம் பரவி வரும் ‘கோமாரி’ நோயைத் தடுக்க பன்றிக் கொழுப்பு மருந்தாக தரப்படுகிறது. – செய்தி

இராமகோபாலன் ஜி, பார்த் தேளா? புனித கோமாதாவுக்கு, பன்றிக் கொழுப்பை ஊட்டுறாளாம்! ‘இந்து’ விரோதிகளை விடாதீங்க, ஜி!

பெரியார் முழக்கம் இதழ் 05122013

You may also like...