காங்கரஸ் நாடகம் போலி கட்டுப்பாடு

 

சென்னை சட்டசபையில் இனாம் மசோதா ஆலோசனைக்கு வந்தபோது அதை ஒத்திவைக்க வேண்டுமென்று வந்த தீர்மானத்தைப் பல காங்கரஸ் மெம்பர்கள் எதிர்த்தார்கள். தோழர் சுப்பராயன் (காங்கரஸ் மெம்பர்) அத்தீர்மானத்தை ஆமோதித்தார். ஆனாலும் காங்கரஸ் சபைதான் கட்டுப்பாடுள்ளதாம்.

தடி அடி வாழ்த்து

காங்கரஸ் தொண்டர்கள் தடியடிபட்ட காலத்தில் போலீஸ் தலைமை உத்தியோகஸ்தரைப் பாராட்டிப் பேசிய தோழர் சுப்பராயன் இன்று காங்கரசுக்கு நண்பர், காங்கரஸ் தலைவர் ஆகிவிட்டார்.

ஆனால் ஜஸ்டிஸ் கட்சியை இந்த காரணத்துக்காக காங்கரஸ்காரர்கள் வைகிறார்கள். ஆனாலும் காங்கரஸ்காரர்களுக்குத்தான் நியாய புத்தி இருக்கிறதாம்.

~subhead

காங்கரஸ் அரசியல் ஞானம்

~shend

சீர்திருத்தத்தின்படி ஏற்படப்போகும் புதிய சட்டசபையில் புகுந்து சீர்திருத்தத்தை உடைத்து அது நடைபெறவொட்டாமல் செய்ய வேண்டும் என்கின்ற காங்கரஸ்வாதிகள் எந்த யோக்கியதையைக் கொண்டு இனாம் மசோதாவை சீர்திருத்தப்படி ஏற்படப்போகும் புதிய சட்டசபையில் நிறை வேற்றலாம் என்று சொல்லுகிறார்களோ தெரியவில்லை. ஆனாலும் காங்கரஸ்காரர்களின் அரசியல் ஞானம் இதுதானாம்.

~subhead

என்ன செய்யப் போகிறார்கள்?

~shend

இந்நிலைமையில் கட்டுப்பாட்டுக்கு விரோதமாய் நடந்த தோழர் சுப்பராயன் அவர்களை காங்கரசு என்ன செய்யப்போகிறது? ஆனாலும் காங்கரசில்தான் கட்டுப்பாடு இருக்கிறதாம்.

குடி அரசு கட்டுரை 06.09.1936

You may also like...