Category: சித்திர புத்திரன்

6. கேள்வி – பதில்

6. கேள்வி – பதில்

(சித்திர புத்திரன்) கேள்வி     :      நாம் பாடுபட்டாலும் வயிற்றுக்குப் போதும்படியான ஆகாரம்கூடக் கிடைப்பதில்லை. ஆனால் பார்ப்பனர்கள் பாடுபடா விட்டாலும் அவர்களுக்கு வயிறுபுடைக்கக் கிடைக்கின்றது. இதற்கு என்ன காரணம்? பதில்       :      நமது மதமும் ஜாதியும். கேள்வி     :      நாம் பாடுபட்டுச் சம்பாதித்தும் நம்ம பிள்ளைகள் படிக்க முடியாமல் நம்மில் 100க்கு 90 பேருக்கு மேலாக தற்குறியாயிருக்கிறோம். ஆனால் பாடுபட்டு சம்பாதிக்காமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனார்களில் 100க்கு 100பேர் படித்திருக்கிறார்கள். இதன் காரணம் என்ன? பதில்       :      மதமும் ஜாதியும். கேள்வி     :      நமது பணக்காரக் குடும்பங்கள் வரவர பாப்பராய்க் கொண்டே வருவதற்குக் காரணமென்ன? பதில்       :      வினையின் பயன். அதாவது நம்மவர்கள் தங்கள் சமூகத்தார் பட்டினி கிடப்பதையும், கல்வி அறிவு இல்லாமல் இருப்பதையும் சிறிதும் கவனியாமல் பார்ப்பானுக்கே போட்டு அவர்களுக்கே படிப்புக்குப் பணமும் கொடுத்து வந்த பாவமானது அந்தப் பார்ப்பனர்களே வக்கீலாகவும், ஜட்ஜிகளாகவும்...