Author: admin

யுவராஜை தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை அறிவித்தது கழகத்தின் போராட்டம் வெற்றி 0

யுவராஜை தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை அறிவித்தது கழகத்தின் போராட்டம் வெற்றி

கடந்த சூன் மாதம் 24 தேதியன்று சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியாளர் கோகுல்ராஜ் என்பவர் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகேயுள்ள தொட்டிபாளையம் இரயில் தண்டவாளத்தில் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இந்நிலையில் கோகுல்ராஜுடன் கல்லூரியில் படித்த சுவாதி என்ற இளம்பெண்ணும், கோகுல்ராஜின் தாயாரும் திருச்செங்கோடு காவல்நிலையத்தில் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டிருப்பதாக புகார் அளித்தனர். அதை தொடர்ந்து கழகம் உள்பட பல்வேறு அமைப்புகளின் போராட்டத்தின் விளைவாக அது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த கோகுல்ராஜும், கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த சுவாதியும் காதலித்து வந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று காலையில் இருவரும் திருச் செங்கோடு அர்த்தநாரிஸ்வரர் மலைக்கோயிலுக்கு சென் றுள்ளனர். அவர்கள் வழி பாடெல்லாம் முடித்துவிட்டு கோயிலைவிட்டு வெளியேறும் போது தீரன் சின்னமலை கவுண்டர்கள் பேரவை நிறுவனர் யுவராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் அவர்கள் இருவரையும் அழைத்து மிரட்டி சுவாதியை கீழே அனுப்பிவிட்டு கோகுல்ராஜை...

மூன்றாவது சுயமரியாதை மகாநாடு 0

மூன்றாவது சுயமரியாதை மகாநாடு

மூன்றாவது சுயமரியாதை மகாநாடு இவ்வருஷம் ராமநாதபுரம் ஜில்லாவில் நடத்தப்பட வேண்டுமென்று அந்த ஜில்லா வாசிகளால் ஈரோடு மகாநாட்டில் கேட்டுக்கொள்ளப்பட்டது யாவரும் அறிந்தாகும். அந்தப்படி இவ்வருஷம் மார்ச்சு மாதம் கடைசியிலாவது ஏப்ரல் முதலிலாவது நடை பெற வேண்டியது மிகவும் அவசியமாகும். ராமநாதபுரம் ஜில்லாவில் மகா நாடு நடத்துவதற்கு தகுந்த இடம் விருதுநகர் என்றே கருதுகின்றோம். ஏனெனில் ரயில் போக்குவரத்து சவுகரியமும் உர்ச்சாகமும், ஊக்கமும், செல்வமும் பொருந்திய சுயமரியாதை வீரர்கள் மிகுதியும் நிறைந்த நகரமும் மற்றும் அவ்வித வீரர்கள் மலிந்த சுற்றுப்பிரதேசங்களுக்கு மத்திய ஸ்தலமாகவும் மதுரைக்கு 25 மைல் தூரத்தில் மிக சமீபமாகவும் ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜ பாளையம், சிவகாசி முதலிய இடங்களுக்கும் அருப்புக் கோட்டை முதலிய இடங்களுக்கும் மத்திய பாகமாகவும் இருப்பதாகும். ஆகவே இந்த வருஷம் மாகாண மகாநாடு விருதுநகரில் நடை பெறுதல் மிக்க நலமென்றே கருதுகிறோம். மகாநாட்டின் வரவேற்புக் கழகத் தலைவராய் திரு. று.ஞ.ஹ. சௌந்திர பாண்டியன் அவர்களும், மகாநாட்டு காரியதரிசிகளாய் திருவாளர்கள்...

சுசீந்திரம் எச்சரிக்கை 0

சுசீந்திரம் எச்சரிக்கை

சுசீந்திரம் தெருவில் நடக்கும் உரிமை சம்மந்தமாய் திருவாங்கூர் ஹைகோர்ட்டில், அந்த ஊர் பாதைகளில் யாவருக்கும் நடக்க உரிமை உண்டென்று தீர்ப்புக் கிடைத்து தண்டிக்கப்பட்ட சத்தியாக்கிரகிகள் விடுதலை அடைந்தும்கூட பார்ப்பன விஷமத்தனத்தின் பலனாய் மறுபடியும் பொது ஜனங்கள் நடக்க தடையேற்பட்டு மறுபடியும் சத்தியாக்கிரகம் நடக்க வேண்டிய அவசியம் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு நாம் என்ன செய்யலாம். வம்புச்சண்டைக்கு போகாமல் இருக்கலாமே ஒழிய வலிய வரும் சண்டையை எப்படி விட முடியும் என்று திருவாங்கூர் அரசாங்கத் திற்கு பணிவான எச்சரிக்கை செய்கின்றோம். குடி அரசு – துணைத் தலையங்கம் – 04.01.1931

மானக்கேடான காரியம் 0

மானக்கேடான காரியம்

லாகூர் காங்கிரஸ் தீர்மானத்தை அனுசரித்து என்று திருவாளர்கள் டாக்டர் யூ. ராமராவ் அவர்களும் ராமதாஸ் பந்தலு அவர்களும் ராஜிநாமா கொடுத்துவிட்ட ராஜாங்க சபை (ஸ்டேட் கவுன்சில்) ஸ்தானங்கள் இரண்டிற் கும் இரண்டு கனவான்கள் போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாய் தெரிந்தோம். இவர்களில் ஒருவர் திருவாளர் எ. ராமசாமி முதலியாரும் மற்றவர் திருவாளர் டி. ஆர். ராமச்சந்திர அய்யரும் ஆவார்கள். சென்னை ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் எதற்காக திரு. டி. ஆர். ராமச்சந்திரய்யரை ராஜாங்க சபைக்கு அனுப்பினார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. திரு. டி. ஆர். ராமச்சந்திரய்யர் இந்து வருணாசிரம தர்ம ஸ்தாபனத்தின் தலைவர். மனுதர்ம சாஸ்திரத்தையும் அதில் சொல்லுகின்றவைகளையே சனாதன தர்ம மென்றும் சொல்லுகின்ற வருணாசிரம தர்மத்தை நிலைநாட்ட முயற்சி செய்யும் சங்கத்திற்கும் தலைவர். இதை அனுசரித்து தினமும் வருணாசிரம மகாநாடு, பிராமண தர்ம மகாநாடு, சனாதன தர்ம மகாநாடு, ஆரிய தர்ம மகாநாடு ஆகியவைகள் கூட்டி தீர்மானங்கள் செய்து பிரசாரமும் செய்பவர்...

புதிய பத்திரிகைகள் 0

புதிய பத்திரிகைகள்

செட்டியார் நாட்டில் திரு. அ. பொன்னம்பலனார் ஆசிரியத் தலை மையில் சண்டமாருதம் பத்திரிகையும், பிரஞ்சு இந்திய நாட்டில் திரு.எஸ். குருசாமி அவர்கள் ஆசிரியத் தலைமையில் புதுவை முரசுப் பத்திரிகையும் துவக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்கு, உண்மைச் சுயமரியாதை உணர்ச்சி உள்ளவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். இன்று சுயமரியாதை இயக்கத்திற்கு சில பத்திரிகைகளே இருக்கின்றன. அதாவது “குடி அரசு” “குமரன்” “நாடார் குலமித்திரன்” “முன்னேற்றம்” “தமிழன்” “புதுவை முரசு” “சண்டமாருதம்” ஆகிய வாரப் பத்திரிகைகளேயாகும். “திராவிடன்” தினசரி ஒன்று இருந்தாலும் அது இருக்குமோ, போய் விடுமோ; இருந்தாலும் சுயமரியாதைக் கொள் கைக்கே உழைக்குமோ என்பது பற்றி பலருக்கு சந்தேகமும் ஏற்பட்டு விட்டது. ஆனாலும் அதையும் சேர்த்தே பார்த்தாலும் இவை மாத்திரம் போதாதென் போம். சீக்கிரத்தில் சுயமரியாதைத் தொண்டனும் கிளம்பி விடுவான் என்றே தெரிகின்றது. ஏனெனில் அதன் ஆசிரியர் தனக்கு மறுபடியும் வேலையும் அவசியமும் வந்துவிட்டதாகக் கருதி முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றார். இனியும் ஜில்லாதோறும் ஒரு...

“சித்திரபுத்திரன்” 0

“சித்திரபுத்திரன்”

சைவன் : – அய்யா, தாங்கள் இப்போது மலேயா நாட்டுக்குப் போய் வந்த பிறகு சைவமாய் விட்டீர்களாமே உண்மைதானா? வைணவன் : – ஆம் அய்யா, நான் நாலுகால் பிராணிகளில் கட்டில், மேஜை, நாற்காலி ஆகியவைகளையும், இரண்டு கால் பிராணிகளில் ஏணி வகையராவும், ஆகாயத்தில் பறப்பவைகளில் பட்டம், ஏரோபிளேன் வகைய ராக்களையும், நீரில் வாழ்பவைகளில் கப்பல், படகு, கட்டு மரம் முதலியவை களையும், பூமியில் நகருபவைகளில் வண்டி, மோட்டார் கார் முதலியவைகளையும் நான் சாப்பிடுவதில்லை. இவைகளைச் சாப்பிடுவது பாவம் என்று எனக்குப் பட்டதினாலும் சைனாக்காரர்களைப் பின்பற்றுவதாலும் இம்மாதிரி முடிவு செய்துவிட்டேன். சைவன் : – அப்படியா, இது நல்ல சைவம் தான். எனக்குச் சற்று வேலை இருக்கின்றது. சீக்கிரம் போக வேண்டும் நான் போய் விட்டு வரு கிறேன். ( என்று சொல்லிக் கொண்டே தன்னை எங்கு சாப்பிட்டு விடுவானோ என்று நினைத்து ஓடிவிட்டார். ) குடி அரசு – உரையாடல்...

மலேயா நாட்டு சுற்றுப் பிரயாணம் 0

மலேயா நாட்டு சுற்றுப் பிரயாணம்

“எதிர் பிரசாரத்தினால்” ஏற்பட்ட நன்மைகள் கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமத்தின் வரவேற்பு சுவாமி விவேகானந்தாவின் பெயரினால் சென்னையில் பார்ப்பனர் கள் செய்யும் ஏமாற்றத்தையும் வஞ்சகத்தையும் பற்றியும் ராம கிருஷ்ணா மிஷினில் சேர்ந்திருக்கும் பார்ப்பனர்களில் 100-க்கு 90 பேர் யோக்கிய மற்றவர்கள் என்றும் உதாரணமாக சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா ஹோம் என்கின்ற இடத்தில் நடக்கும் அக்கிரமம் கணக்கு வழக்கில்லை யென்றும் அங்கு நடக்கும் பணம் நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது பார்ப்பனரல்லாதாருடையதென்றும், வருஷம் 20000, 30000 ஆயிரம் அந்த ஹோமின் பேரில் பார்ப்பனரல்லாதாரிடமிருந்து கொள்ளை அடிக்கப்படு கின்றதென்றும், இதை அறிந்த தனது நண்பரும் சுயமரியாதை சங்கத் தலை வருமான உயர்திரு டபிள்யூ பி.ஏ. சௌந்திரபாண்டியர் சட்டசபையில் கூட கேள்வி கேட்டு அக்கொள்ளையை நிறுத்த முயற்சித்தார் என்றும், ஆனாலும் அரசாங்கத்தில் முக்கிய உத்தியோகத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் செல்வாக் கால் பார்ப்பனரல்லாத பயங்காளிப் பெரியவர்கள் அவர்களுக்கு அடிமை யாகி சிறிதும் சுயமரியாதை உணர்ச்சி இல்லாமல் பொது மக்கள் பணத்தை வசூல்...

தோன்றிவிட்டது சமதர்ம உணர்ச்சி 0

தோன்றிவிட்டது சமதர்ம உணர்ச்சி

பீரார் நாட்டில் லேவாதேவிக்கார பணக்காரர்கள் வீட்டிலும் ஏராள மாக பூமிகள் வைத்திருக்கும் மிராசுதாரர்கள் வீட்டிலும் கைத்தொழி லாளிகளும் விவசாயத் தொழிலாளிகளும் கூட்டம் கூட்டமாகப் புகுந்து பணங்களையும், தானியங்களையும் கொள்ளையடித்ததோடு கடன் பத்திரங்கள், பாண்டுகள், கணக்குப் புஸ்தகங்கள் முதலிய கடன் கொடுத்த ஆதாரங்களையும், பூமிகள் குத்தகைக்குக் கொடுத்த ஆதாரங்களையும் தேடி எடுத்து அவைகளை நெருப்பிட்டுக் கொளுத்தி சாம்பலாக்கி விட்டதாகச் செய்திகள் தினசரிப் பத்திரிகைகளில் காணப்படுகின்றன. அவைகள் மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. இதுமாத்திரமல்லாமல் இந்தப்படி செய்ததற்கு மற்றொரு நோக்கமும் அதில் காணப்படுகின்றது. அதாவது, இந்த மாதிரி ரொக்க சொத்துக்களும், பூமி சொத்துகளும் அநேகமாய் பார்ப்பனர் முதலாகிய உயர்ந்த சாதிக்காரர்கள் இடமும், லேவாதேவிக்காரர் கள் இடமுமே போய் சேரக்கூடியதாய் இருப்பதால் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்பவர்களையும் கண் வைத்துக் கொள்ளை அடிக்கப் பட்டிருப்பதாகத் தென்படுகிறது. ஆகவே இவற்றிலிருந்து இந்த முறையை உயர்ந்த ஜாதி தத்துவத் தையும், பணக்காரத் தத்துவத்தையும் அழிப்பதற்கே கையாளப்பட்டதாக நன்றாய்த் தெரிய வருகின்றது. உலகத்தில்...

மலாயா பிரயாணம் 0

மலாயா பிரயாணம்

மலாயா நாட்டுக்கு “சென்ற வருஷம்” டிசம்பர் µ 15 ² கப்பலேறி, “இவ்வருஷம்” ஜனவரி மாதம் 16 தேதி இந்திய நாடு சுகமே வந்து சேர்ந்தோம். இந்த சுற்றுப் பிரயாணத்தில் மலாய் நாட்டில் நடந்த விஷயங்கள் ஒருவாறு சென்ற வாரப் பத்திரிகையிலும், இவ்வாரப் பத்திரிகையிலும் பிரசுரித்திருக் கும் மலாய் நிரூபரின் சுற்றுப் பிரயாண நிரூபத்தில் காணலாம். மலாய் பிரயாணத்தைப் பற்றி நாம் சிறிதும் நினைத்திருக்காத நிலையில் திரு. சாமி அற்புதாநந்தா அவர்களால் எழுதப்பட்ட ஒரு கடிதம் வந்தது. அக்கடிதத்தில் மலாய் நாட்டில் சுயமரியாதை இயக்கக் கொள்கை உணர்ச்சி விசேஷமாய் பரவி வருகின்றதெனினும், சில விஷமக்காரர்கள் சுயநலத்தின் காரணமாய் இந்து மதத்தின் பேரால் தொல்லை விளைவிக் கின்றார்கள் எனவும், சுயமரியாதைக்காரர்களுக்கு, “இந்துக்களைப் புதைக் கும் சுடுகாட்டில் கூட இடம் கொடுக்கக் கூடாது” என்று இந்து மத சங்கத்தில் தீர்மானங்கள் கொண்டு வந்ததாகவும், சுயமரியாதைக் கல்யாணங்களை சர்க்கார் ஒப்புக் கொள்ளக்கூடாது என்று விஷமம் செய்கின்றார்கள்...

உதிர்ந்த மலர்கள் 0

உதிர்ந்த மலர்கள்

1. நமது நாடு பார்ப்பனீய ஆதிக்கத்திலும் பணக்கார செல்வாக்கிலும் இருக்குமட்டும் பிரிட்டிஷ் அரசாங்கம் இருந்துதான் ஆகவேண்டும். 2. பூரண சுயேச்சை என்பது ஒரு மனிதன் எந்த விதத்திலும் எதற்கும் அடிமைபட்டிறாத விடுதலை என்றால் நான் அதை மனப்பூர்வமாய் வரவேற்கின்றேன். அப்படிக்கில்லாமல் பிரிட்டிஷார் இந்த நாட்டைவிட்டு போவதும் (திரு. காந்தி சொல்லும்) ராம ராஜ்ஜியம் ஏற்படுத்துவதும் என்றால் ருஷிய அரசாங்கத்தையே நான் கூவி அழைக்க முந்துவேன். 3. இந்த நாட்டிற்கு சீர்திருத்த உணர்ச்சி ஏற்பட்டு அதை அமுலில் நடத்திவைக்கும் ஆசை பொது மக்களுக்கு ஏற்பட்டதற்காக யாருக்காவது நன்றி செலுத்த வேண்டுமானால் அது முதலில் திருமதி மேயோ அம்மைக்கு உரியதாகும். ( ஈ. வெ. ரா.) குடி அரசு – துணுக்குகள் – 02.02.1930

சிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாடு 0

சிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாடு

தான் மலேயா நாட்டிற்கு வந்து ஒரு வாரமே ஆகின்றபடியாலும் இரண்டு மூன்று ஊர்களே பார்த்திருக்கின்றபடியாலும் அதற்குள் மலேயா நாட்டைப் பற்றி ஒன்றும் சொல்ல முடியாதென்றும், மதுவிலக்கைப்பற்றியும் இம்மகாநாட்டைப் பற்றியும் பேசுவதாகவும் சொல்லி மதுவிலக்கு என்பது இன்றைய நிலையில் இந்துக்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் சுலபத்தில் விலக்கு செய்யக் கூடியதல்லவென்றும், இவர்களிடம் கடவுள் மூலமாகவும் மதக்கொள்கை மூலமாகவும் மதுப்புகுந்திருக்கின்ற தென்றும் அவ்விரண்டு அபிப்பிராயமும் தளர்த்தப்பட்டாலல்லாமல் பொதுவாக பூரண மது விலக்கு முடியாதென்றும் சிறப்பாக நூற்றுக்குத் தொண்ணூறு மக்களாகிய பாமர மக்களுக்குள் சிறிதுகூட முடியாதென்றும் இந்துக்களுடைய கடவுள்களில் பாமர மக்கள் கடவுள்களாகிய முருகன் காட்டேரி கருப்பன் வீரன் முனி யாண்டி காளி பராசக்தி முதலாகிய கடவுள்களும் மற்றும் பல பார்ப்பன கடவுள்களும் யாகம் சாந்தி முதலிய வைதீகச் சடங்குகளுக்கு வழிபடும் இந்துக்களில் மதுவை கட்டாய வஸ்துவாக கொண்டிருக்கின்றது என்றும் அனேகம்பேருக்கு மதுபானம் மதசம்பிரதாயத்திலும் மரியாதை சம்பிரதாயத் திலும் கட்டாய வஸ்துவாக கருதப்பட்டு வருகின்றது என்றும் அதனாலேயே தான்...

மலேயா நாட்டு சுற்றுப்பயணம் எதிர்ப்பிரசாரத்தால் ஏற்பட்ட நன்மைகள் 0

மலேயா நாட்டு சுற்றுப்பயணம் எதிர்ப்பிரசாரத்தால் ஏற்பட்ட நன்மைகள்

தனக்கும் தனது நண்பர்களுக்கும் இந்தப் பினாங்கில் செய்த வரவேற் பும் உபசாரமும் பத்திரங்களில் கண்ட புகழ் மொழிகளும் மற்றும் தன்னைப் பற்றிப் பேசிய புகழ் வார்த்தைகளும் தனது ஊர்வலத்தில் ஜனங்கள் நடந்து கொண்ட மாதிரியும் பார்த்து தான் மிகுதியும் வெட்கமடைவதாயும் இவை களில் அனேகம் தனது தகுதிக்கும் தனது கொள்கைக்கும் சிறிதும் பொருத்த மற்றதென்றும் மலாய் நாட்டு மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் தான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருந்தாலும் அதைக் காட்டிய மாதிரி தனக்கு மிக்க சங்கடத்தை கொடுத்ததென்றும் இனியும் இம்மாதிரி இந்த நாட்டில் யாரும் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மலாய் நாட்டு பிரமுகர்கள் கடமையென்றும் சொல்லிவிட்டு தனது மலாய் நாட்டு வரவைப் பற்றி இங்கு ஏற்பட்டிருந்ததாய் சொல்லிக் கொள்ளப்பட்ட சில எதிர்ப்பு பிரஸ்தாபங்க ளைக் கேட்டு தனக்கே தனது தொண்டில் சிறிது சந்தேகம் ஏற்பட்டு தாம் ஏதாவது பெரிய தப்பிதம் செய்கின்றோமா என்றுகூட யோசித்ததாகவும் ஆனால் பினாங்கைப் பார்த்த பிறகு...

உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் வரட்டும்! 0

உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் வரட்டும்!

உயர்நீதிமன்றங்களில் வழக்காடும் உரிமை தமிழுக்கும் வேண்டும் என்று போராடும் வழக்கறிஞர்களின் போராட்ட நியாயங்களை திராவிடர் விடுதலைக் கழகம் வரவேற்கிறது. வழக்கு தொடுக்கும் பாமர மக்கள் தங்களுக்காக வழக்கறிஞர் என்ன வாதங்களை முன் வைக்கிறார் என்பதோ, நீதிபதி என்ன கூறுகிறார் என்பதோ அறியாத ‘தற்குறிகளாக்கப் படுவது’ அவமானகரமானதாகும். இராஜ°தான், உ.பி., மத்திய பிரதேசம், பீகார், மாநில உயர்நீதிமன்றங் களில் வழக்காடு மொழியாக இந்திக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் 348(2) பிரிவு மாநில மொழிகளை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகப் பயன்படுத்தலாம் என்று கூறுகிறது. இதற்கு மாநில ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற வேண்டும். 2002ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, இது குறித்து உயர்நீதிமன்றத்திடம் கருத்து கேட்டார். ஆனால் நீதிமன்றம் தமிழை வழக்காடு மொழியாக்க மறுத்துவிட்டது. மீண்டும் 2006இல் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு வழக்காடு மொழியாக்கலாம் என்று உயர்நீதிமன்றம் கூறியது. (அப்போது...

ஈரோடு ஆலயப் பிரவேசம் 0

ஈரோடு ஆலயப் பிரவேசம்

ஈரோடு ஆலயப் பிரவேச விஷயமாய் தமிழ்நாடு என்னும் பத்திரிகை யில் சில விஷயமும் காணப்படுகின்றது. அது விஷமத்தனமானதாகும். ஈரோடு தேவஸ்தானக் கமிட்டியில் ஆலயப் பிரவேச தீர்மானம் செய்யப்பட்டது முதல் “தமிழ்நாடு” பத்திரிகை செய்து வந்த விஷமத்தனமும் பொய்ப் பிரசாரமும் நாம் அவ்வப்போது அவைகளைப் பலமாய் கண்டித்ததும் நேயர்களுக்கு நினைவிருக்கும். அத்தீர்மானம் நிறைவேறிய பின் நாம் ஊரிலில்லாத காலத்தில் நமக்குச் சிறிதும் தகவல் அன்னியில் சிலர் திடீரென்று ஆலயப் பிரவேசம் செய்து வீண் கலாட்டா செய்து விட்டார்கள் என்றாலும், நாம் ஊரிலிருந்து வந்து விஷயம் தெரிந்து இம்மாதிரி நம் பேரால் நம்மைக் கேட்காமல் திடீரென்று கலாட்டா செய்ததைப் பற்றி கண்டித்தபோது சிலர் ஆலயப் பிரவேசத்திற்கு “நீதான் அதிகாரியா? உன்னைக் கேட்டுத்தான் செய்ய வேண்டுமா? எங்கள் இஷ்டப்படியே நடக்க எங்களுக்கு உரிமை உண்டு. ஆதலால் அதைப் பற்றி நீ கேழ்க்க வேண்டியதில்லை” என்று சொன்னார்கள். இதை அனுசரித்து திரு. ஈஸ்வரனும் பத்திரிகைகளுக்கு அப்போதே ஒரு...

செங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல் 0

செங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்

செங்கல்பட்டு ஜில்லா போர்டுக்கு 30-1-29 தேதியில் தலைவர் தேர்தல் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் தேர்தல் அடுத்த மார்ச்சு மாதம் 31 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக ஒரு சேதியும் தேர்தல் நடந்து ராவ் சாகிப் திரு. ஜெயராம் நாயுடு அவர்கள் தலைவராக தேர்தல் ஆகிவிட்டதாக ஒரு சேதியும் கிடைத் திருக்கின்றது. எப்படியானாலும் தேர்தல் முடிவு நமது உண்மை நண்பர்களான திரு. திவான்பகதூர் எம். கே. ரெட்டியாருக்காவது அல்லது திரு. ராவ் சாகிப் சி. ஜெயராம் நாயுடுகாருக்காவது ஆகாமல் அதற்கு விரோதமாய் வெளி யாருக்கு அதாவது பார்ப்பன அடிமைகளுக்குப் போய் விடக் கூடாது என்பதே நமது ஆசை. இருவரும் சுயமரியாதை வீரர்களே ஆவார்கள். நிற்க நாம் கொஞ்ச காலத்திற்கு முன் “பார்ப்பனர்களும் பார்ப்பனக் கூலிகளும் அடிமைகளும் அவர்களது யோக்கியதை வெளியாக அடங்கிப் போய் விட்டார்கள். ஆனாலும் மறுபடியும் தலைகாட்ட நமக்குள் ஏதாவது சண்டை ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னபடிக்கு இச்சிறு விஷயங்களை...

பூரண சுயேச்சைப் புரட்டு 0

பூரண சுயேச்சைப் புரட்டு

அரசியல் புரட்டுகள் நாளுக்கு நாள் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறி, மக்களை ஏமாற்றி நாட்டைப் பாழாக்கிக் கொண்டு வருகின்றது என்பதற்கு உதாரணம் இந்திய தேசிய காங்கிரஸ் என்பது. “இந்தியா பூர்ண சுயேச்சை அடைய வேண்டும் என்பது காங்கிரஸ் லட்சியம்” என்பதாக தீர்மானிக்கப்பட்டிருப்பதே போதுமான அத்தாட்சியாகும். மத சம்மந்தமான புரட்டுகளுக்கு மதிப்பு குறைந்த பின்பே தந்திரக்காரர்களும் சுயநலக் காரர்களும் ஏமாற்றி வயிரு வலிப்பவர்களும் இந்த அரசியல் புரட்டை இவ்வளவு ஆதிக்கத்திற்கு கொண்டு வர வேண்டியதாகி விட்டது. இன்றைய தினம் இந்தியாவிலுள்ள மக்களில் லக்ஷத்தில் ஒருவருக்குக் கூட பூர்ண சுயேச்சை என்றால் என்ன? அதற்கு என்ன செய்ய வேண்டும்? அதனால் நமக்கு என்ன பலன் உண்டு என்பன போன்ற விஷயங்கள் சிறிதும் தெரிந்திருக்காதென்றே சொல்லலாம். அது மாத்திரமல்லாமல் பூரண சுயேச் சைத் தீர்மானம் கொண்டு வந்தவர்களும் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தவர்களுமே அதற்கு ஏதாவது ஒரு அர்த்தம் கற்பித்துக் கொண்டு அல்லது தங்களுக்குள்ளாகவே விளக்கிக்...

தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல் 0

தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல்

தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல் இம்மாதம் 27 ² நடைபெறக் கூடும் என்று தெரியவருகின்றது. அத்தேர்தலில் நமது நண்பரும் சுய மரியாதை இயக்க சங்கத்தின் உப தலைவருமான ராவ்பகதூர் உயர்திரு. எ. டி. பன்னீர் செல்வம் அவர்களே அநேகமாய் மறுபடியும் தேர்ந்தெடுக்கப் படுவார் என்றே எதிர்பார்க்கின்றோம். ஆயினும் அவரது வெற்றிக்கு விரோதமாய் ஒரு உணர்ச்சிமிக்க முயற்சியாய் வேலை செய்து வருவதாயும் தெரியவருகின்றது. திரு. செல்வம் அவர்கள் வெற்றிக்கு விரோதமாய் வேலை செய்கின்ற உணர்ச்சிக்கு நியாயமான தகுந்த காரணங்கள் ஏதாவது இருந் தாலும் இருக்கலாம். ஆயினும் நாம் திரு. செல்வம் அவர்கள் வெற்றியையே மன, மொழி, மெய்களால் கோர வேண்டியவர்களாகவே இருக்கின்றோம். ஏனெனில், பொதுவாக தஞ்சை ஜில்லா பொதுமக்களைப் பொறுத்த வரையி லும் குறிப்பாக பார்ப்பனரல்லாதார் நன்மையைப் பொறுத்த வரையிலும், சிறப்பாக சுயமரியாதை இயக்கத்தின் நன்மையைப் பொறுத்த வரையிலும் திரு எ. டி. பன்னீர் செல்வம் அவர்களே தஞ்சை ஜில்லா போர்டுக்கு...

நாகர்கோவில் மகாநாடு 0

நாகர்கோவில் மகாநாடு

சுயமரியாதை இயக்கத்தின் ஆதரவின் கீழ் திருவாங்கூர் சமஸ் தானத்தைச் சேர்ந்த நாகர்கோவிலில் டிசம்பர் 27, 28-ல் கூடிய அகில திருவாங்கூர் சமுதாயச் சீர்திருத்த மகாநாட்டின் சுருக்கமான நடவடிக்கை களை மற்றோரிடத்தில் வெளியிட்டிருக்கிறோம். இம்மகாநாட்டைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் முன், நாம் அதற்குப் போகக் கூடாமல் போனதற்காக நமது சமாதானத்தைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். இம் மகா நாட்டை நடத்துவதற்காக மாதக் கணக்காய் பெருமுயற்சி எடுத்து ஏற்பாடு செய்து வந்த திருவாளர் பி. சிதம்பரம் பி. ஏ. பி. எல். அவர்களின் விருப்பத் திற்கிணங்க நாமும் வருவதாக ஒப்புக் கொண்டதோடு நமது சவுகரியத்தை உத்தேசித்தே மகாநாடும் 2, 3 தடவை ஒத்திவைக்கப் பட்டதாயினும், திடீ ரென்று எதிர்பாராமல் மலேயா நாட்டிலிருக்கும் நமது சகோதரர்கள் பெருஞ் செலவில் ஒரு மகாநாட்டை நடத்துவதாக ஏற்பாடு செய்து கொண்டதோடு, நமது சுற்றுப் பிரயாணத்தைப் பற்றிய நீண்ட அறிக்கையையும் வெளியிட்டு விட்டு, நமக்கு அவசரமாக உடனே புறப்படுமாறு தந்திச் செய்தி...

அருஞ்சொல் பொருள் 0

அருஞ்சொல் பொருள்

அதிக்கிரம – நெறி தவறிய, வரம்பு மீறிய அவிபக்தம் – பிரியாதது ( கூட்டுக்குடும்பம் ) அனந்தம் – அளவற்றது, எல்லையற்றது அனுஷ்டானம் – நடைமுறை, ஒழுக்கம், வழக்கம் ஆப்புக்கடாவின – ஆப்பு வைத்தல், ஆப்பு அடித்தல் இஷ்ட சித்தி – விரும்பியது கைகூடல், எண்ணிய வண்ணம் நடைபெறல் ஓதா ( ஹோதா ) – அமைவு, இருப்பு, நிலைமை குமரி இருட்டு – கன்னி இருட்டு, விடியற்கு முன் உள்ள இருள் கெம்பு – சிவப்பு இரத்தினக்கல் சங்காத்தம் – தோழமை, இணக்கம் சிட்சை – தண்டனை சிஷ்ட பரிபாலனம் – நல்லோரைக் காத்தல் சீதோஷ்ண ஸ்திதி – தட்பவெப்ப நிலை சுவாதந்திரியம் – சுதந்திரம், தன்விருப்பம், விடுதலை, விடுபாடு தங்கடங்கள் – தங்கள் தங்கள் தர்க்காஸ்து – தரிசு தாரதம்மியம் – ஏற்றத் தாழ்வு தர்ப்பீத் – பயிற்சி துராக்கிருதம் – வல்லாந்த கற்பழிப்பு, பலாத்கார கற்பழிப்பு துவஜ...

0

திரு.வேணுகோபால் நாயுடுவின் மரணம் பட்டுக்கோட்டையில் திரு, வேணுகோபால் நாயுடு அவர்கள் இறந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் எமது மனம் துடித்த துடிப்பைச் சொல்லிவிட முடியாது. சில நிமிஷங்கள் வரை நிம்மதியில்லாமல் மனது தத்தளித்துக் கொண்டிருந்தது. இப்போதும் இச்சம்பவத்தை நினைக்குந் தோறும் மனம் திடுக்கிடுகிறது. திரு.வேணுகோபால் நாயுடு அவர்கள் பார்ப்பனீயம் நிறைந்த பட்டுக்கோட்டையில், நமது மக்களுக்கு, அதுவும் முக்கியமாக இளைஞர்களுக்கு எவ்வளவு ஆதரவாகவும் உதவியாகவும் இருந்தார்கள் என்பது அவ்விடத்தில் இன்று இளைஞர்கள் படும் துயரத்தை நேரில் பார்ப்பவர்களுக்கு நன்கு தெரியும். மாணவர்களுக்கு நற்புத்தி புகட்டக்கூடிய பிதாவும், ஏழைமக்களுக்கு வேண்டுவன அளித்து அவரது துயர்நீக்கி வந்த அண்ணலும், பார்ப்பனீயமும் புரோகிதப்புரட்டு கண்டு அஞ்சும்படியான சுயமரியாதை வீரரும், வக்கீல் தொழிலில் ஒரு பிரபலஸ் தரும், பொதுவாக, பார்ப்பனரல்லாதார்களுக்கே தஞ்சை ஜில்லாவிற்கு ஒரு தலைவருமாக விளங்கிய திரு. வேணுகோபால் அவர்களை இழந்தது நமக்கு ஒரு பெரிய நஷ்டம் என்றே சொல்வோம். அவர்களது முற்போக்கான கொள் கைகளும்,...

விவாகரத்து 0

விவாகரத்து

சமீபத்தில் சென்னையில் நடந்த ஸ்திரீகள் மகாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை வாசகர்கள் அறிந்திருக்கலாம். அவைகளில் முக்கியமாக இரண்டு தீர்மானங்கள் மாத்திரம் அதிகமான விவாதத்திற்குக் காரணமாயிருந் தன. “ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சரிசமானமான ஒழுக்க முறைகள் ஏற்படுத்த வேண்டும்” என்பது ஒன்று. “கலியாணமானப் பெண்கள் தகுந்த காரணமிருப்பின் தங்களுக்கிஷ்டமான போது தங்கள் விவாகத்தை ரத்து செய்து கொள்ளலாம்” என்பது இரண்டு. இந்த இரண்டு தீர்மானங்களும் பெரிய படித்த மனிதர்கள் என்பவர்களையும் பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுகிற வர்கள் என்பவர்களையும் சரியான பரீட்சை பார்த்துவிட்டது என்றே சொல் வோம். நமது தென்னிந்தியாவிலுள்ள பத்திரிகைகள் எல்லாம் ஒன்றுவிடாமல் “விவாகரத்து” தீர்மானத்தை கண்டித்துவிட்டன. இத்தீர்மானம் சம்பந்தமாக பத்திரிகைகளில் நடந்த வாக்குவாதங்களும், மறுப்புகளும், கண்டனங்களும் அவைகளுக்கு எழுதப்பட்ட பதில்களும் நமது வாசகர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். வயது சென்ற ஸ்திரீகள் என்று சொல்லக்கூடியவர்களில் சிலர் தீர்மானத்தின் உண்மையை உணராமல் இதை எதிர்த்த விஷயம் நமக்கு மிகவும் ஆச்சரியமாகவே இருக்கிறது. ஸ்திரீகள் மகாநாடு...

மேயோ கூற்று மெய்யா- பொய்யா? 0

மேயோ கூற்று மெய்யா- பொய்யா?

கோவை திருவாளர் அ.அய்யாமுத்து அவர்களால் இயற்றப் பெற்ற மேற்கண்ட நூலின் பிரதி ஒன்று வரப் பெற்றோம். கன்னி மேயோ கருத்தைப் பற்றியோ, அவர் கூறியது இன்சொல்லா புன்சொல்லா என்பது பற்றியே நமக்கு கவலையில்லை. கூறிய கூற்று மெய்க்கூற்றா பொய்க்கூற்றா என்பதை நாம் அறிந்து கொள்ள கடமைப் பட்டிருக்கின்றோம். சிலர் மேயோ ஆதிக்க வெறி கொண்ட வெள்ளையர்களால் கூலிக்கு வேலை செய்ய வந்த குப்பைக்காரி என்கின்றனர். குப்பைக்காரி என்றால் என்ன? மேயோவின் கூடையில் குப்பை நிறைந்ததா? இல்லையா? குப்பை திரட்ட வந்து வெறுங்கூடையுடன் சென்றாளா? வெறுங்கூடையுடன் சென்றுதான் நிறை கூடையுடன் இந்தியாவிலிருந்து திரும்பி வந்ததாகத் திரித்துக் கூறினளா? என்பன நமது கடா. இக்கடாவிற்கு, வைக்கம் வீரர், மாசற்ற நெஞ்சுடையார், தூய வாழ்க்கையினர், துகளிலாப் பொது நோக்குடையார், தேசத் தொண்டில் திளைத்த திண்மையினார், அத்தேசத் தொண்டை கதர்தொண்டில் ஈடுபடுத்தித் திகழும் திருவுடையார், திராவிடன், குடியரசு பத்திரிகைகளில் பழந்தமிழ் மக்களிடை பாரறிய மெய்ஞ்ஞானக் கட்டுரைகள் வரைந்த...

“தீண்டப்படாதார்”கள் நிலைமை 0

“தீண்டப்படாதார்”கள் நிலைமை

“இந்து மதத்தில்” தீண்டப்படாதவர்கள் என்பவர்களின் பரிதாபகரமான நிலமையைப் பற்றி நாம் அடிக்கடி எழுதி வந்திருக்கிறோம். இன்றைய தினம் நமது நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது கேவலமான நிலையை உணர்ந்து தாங்கள் பார்க்கக் கூடாதவர்களாகவும் நெருங்கக் கூடாதவர்களாகவும், தொடக் கூடாதவர்களாகவும் இதர “இந்திய” மக்களால் ஒதுக்கிவைக்கப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டும் வருவதிலிருந்து தங்களை மீட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையினால் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். சமீபத்தில் பூனாவில் கோயில் பிரவேசம் சம்பந்தமாக சத்தியாக்கிரகம் நடைபெற்று அதன் வேகம் இன்னும் குறையாமல் அவ்விடத்திய மக்களது உணர்ச்சியைத் தட்டி யெழுப்பியிருக்கிறது. வட இந்தியாவில் காசி முதலிய பல இடங்களிலும் இதே மாதிரியாக தாழ்த்தப்பட்டவர்களின் கிளர்ச்சி அதிகமாகும் அடையாளங்களும் காணப்படுகின்றன. தென் இந்தியாவில், அதிலும் முக்கியமாக தமிழ் நாட்டில் நமது சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்து வேரூன் றிய சில வருஷங்களுக்குள்ளாகவே, சிறிது காலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில் பொது ஜனங்களுக்கு சிறிது கவலை ஏற்பட்டிருப்பதோடு கூட அவர்களுக்கும் தங்கள் கேவலமான...

துன்பத்தில் துயருறும் பெண்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் 0

துன்பத்தில் துயருறும் பெண்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்

சகோதரிகளே! சகோதரர்களே! சீர்திருத்தம் என்பது பற்றி இதற்குமுன் நண்பர்கள் பேசினார்கள். அவர்கள் பிரசங்கத்தில் உற்சாக மிகுதியினால் சொன்ன மிக உயர்ந்த பொருள்களையெல்லாம் பெரும்பாலும் நீங்கள் விளையாட்டாக எண்ணக் கூடும். இதுவரையில் அவர்கள் நமதியக்கத்தின் முற் போக்கின் பொருட்டு பட்ட கஷ்டங்களையும் எடுத்துக் கொண்ட சிரமங்க ளையும் அவர்கள் எண்ணி இன்றைய சீர்திருத்த மண வைபவத்தின் உற்சாகத் தில் பேசினார்கள். அவர்கள் ஒவ்வொருவர் கூறிய சொற்பொழிவுகளிலும் மிக உயர்ந்த பொருள்கள் விளங்கியது. இவைகளை எல்லாம் கேட்ட நீங்கள் சில மாறுதல்களை அடையக்கூடும். இதுவரையில் பார்ப்பனனையும், அவன் கொள்கைகளையும், அவனது பழக்கவழக்கங்களையும் கண்டித்து வந்தோம். நீங்களும் பார்ப்பனனை திட்டுகிறவர்கள் என்று எங்களை எண்ணி இருந்தீர்கள். பார்ப்பனனை திட்டிய காலம் மலையேறி போய்விட்டது. ஏனெனில் முதலில் பார்ப்பனனை திட்டிய பின்பே புத்தி சொல்லக் கூடிய நிலையில் இருந்தீர்கள். பார்ப்பான் இன்னின் னவை செய்கிறான், அதில் தீது இவைகள் என்பதை எடுத்துக் காட்டி பின்பு நீங்கள் அவனது...

திரு. குருசாமி – குஞ்சிதம் திருமணம் 0

திரு. குருசாமி – குஞ்சிதம் திருமணம்

சென்ற ஞாயிற்றுக்கிழமை 8-ம் தேதியன்று ஈரோட்டில் எமது இல்லத்தில் நடைபெற்ற ‘ரிவோல்ட்’ உதவி ஆசிரியர் திரு.குருசாமியின் திருமணத்தைப் பற்றிய முழு விவரங்களை மற்றொரு பக்கத்தில் வெளியிட்டிருக்கிறோம். இந்தத் திருமணமானது பல வழிகளிலும், ஏனைய திருமணங்களைவிட சிறந்தது என்பதற்கு சற்றும் சந்தேகமில்லை. முதலாவதாக இது ஒரு காதல் மணம். மணமகனும் மணமகளும் ஒத்த கல்வியும், ஒத்த அன்பும், ஒத்த குணமும், ஒத்த உடல் நலனும் உடையவர்களாகையால் அவ்விருவரும் ஒருவரையொருவர் காதலித்து செய்து கொண்ட திருமணமாகையால் இதைக் காதல் திருமணம் என்றோம். இரண்டாவதாக ஒரு வகுப்பிலுள்ள மணமகன் மற்றொரு வகுப்பைச் சார்ந்த மணமகளை மணந்து கொண்டதால் இது ஒரு கலப்பு மணமாகும். இந்தச் சீர்திருத்த மணத்திற்கு முக்கியமாய் மணமகன் திரு.குருசாமி அவர்களுக்கு பல இடையூறுகள் நேர்ந்தன. இந்தத் திருமணத் தின் சிறப்பைக் கூறுமுன் மண மகனது சாதியாராகிய “முதலியார்” எனப்படு வோர்கள் இவ்விதக் காதல் மணங் களுக்கு எவ்வளவு இடையூறாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி...

நமது மலாய் நாட்டு விஜயம் 0

நமது மலாய் நாட்டு விஜயம்

நாம் இவ்வாரம் மலாய் நாடு போகும் விஷயம் பத்திரிகைகள் மூலம் வெளிவந்திருப்பதை வாசகர்கள் அறியலாம். மலாய் நாட்டிலுள்ள சுயமரியாதை இயக்கத்திலீடுபட்ட அன்பர்களும் தொண்டர்களும் வெகு நாட்களாக விரும் பியதற்கும் நாமும் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படையான கொள்கைகள் உலகிலுள்ள எல்லா மக்களிடையிலும் பரவி நன்மை பயக்க வேண்டுமென எதிர்பார்த்திருந்ததற்கும் ஏற்ப, நாம் மலாய் நாடு செல்கிறோம். நாம் இப்போது அங்கே போவது நமது நாட்டிலுள்ள வேலைகளையெல்லாம் நாம் முடித்து விட்டோம் என்ற கருத்திலல்ல. பின் என்னவெனில், இந்த 5, 6 ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கத்தின் மூலமாய், மக்களிடையிலிருக்கின்ற புரட்டு களையும் மூடநம்பிக்கைகளையும் எப்படி இங்கு எடுத்துரைத்தோமோ அதே போல், மலாய் நாட்டில் குடியேறியுள்ள தமிழ் மக்களிடத்திலும் நமது இயக்கத்தின் கொள்கைகளை நேரில் எடுத்துச் சொல்ல வேண்டுமென்னும் ஆசையினால்தான் நாம் இப்போது மலாய் நாடு செல்கின்றோம். தாய் நாட்டி லிருந்து இதர இடங்களாகிய மலேயா, தென் ஆப்பிரிக்கா முதலான அயல் நாடுகளுக்கு ஜீவனத்திற்காகக் குடியேறிய...

சோமசுந்திரம் செட்டியார் 0

சோமசுந்திரம் செட்டியார்

கோயமுத்தூர் காளிஸ்வர மில்லை ஏற்படுத்தினவரும், மற்றும் பல பெரிய மில்லுகளையும் நிர்வாகம் செய்து வந்தவருமான திருவாளர் தேவ கோட்டை திவான் பகதூர் பி.சோமசுந்திரம் செட்டியார் அவர்கள் திடீரென்று மரண மடைந்ததைக் கேட்டு நாம் மிகுதியும் துயர் உறுகின்றோம். திரு.சோம சுந்தரம் அவர்கள் தென் இந்தியாவில் ஒரு ஒப்பற்ற மனிதராவார். அவருக் குள்ள நிருவாக சக்தி வேறு ஒருவரிடமும் காணமுடியாது. மேல்நாட்டு நிருவாக நிபுணர்களை விட சிறந்தவர் என்றே சொல்லலாம். ஒரு இந்தியர் எவ்வளவு பெரிய தொழில் வேண்டுமானாலும் செய்ய சக்தி உள்ளவர் என்பதை தென்னிந் தியாவுக்கு அவரே வெளிப்படுத்தினார். ஆகவே, அவரது பிரிவால் தென் இந்தியா ஒரு பெரிய வியாபார நிர்வாக நிபுணரை இழந்ததென்றே சொல்ல வேண்டும். அவரது குமாரரான திரு.சாத்தப்ப செட்டியாருக்கு நமது ஆழ்ந்த துக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். குடி அரசு – இரங்கல் செய்தி – 08.12.1929

அருஞ்சொல் பொருள் 0

அருஞ்சொல் பொருள்

அசுபம் – தீமை அதிதிகள் – விருந்தினர்கள் அநர்த்தம் – பேரழிவு அடைப்பம் – சவரக்கருவிகள் வைக்கும் பெட்டி, வெற்றிலைப்பாக்குப் பெட்டி ஆக்ஞை – கட்டளை, ஆணை உபதானம் – பிச்சை எடினமாக – கடினமாக சள்ளைக்காரன் – தொல்லை செய்பவன் சாகவாசம் – நட்பு, தோழமை சேதித்து – வெட்டி, அறுத்து நிஷ்காரணமாய் – காரணமில்லாமல் பரத்துவம் – கடவுள் தன்மை பரிவாரம் – சுற்றி இருப்போர், உடன் இருப்போர் பர்த்தி – இணை, ஒப்பு, நிரப்பல் மித்தை – பொய் யாதாஸ்து – அறிக்கை, குறிப்பு விக்கினம் – இடையூறு, தீது வியாகரணம் – இலக்கணம்

சுயநல வெறியர்கள் மகாநாடு 0

சுயநல வெறியர்கள் மகாநாடு

சென்னை ஒற்றைவாடை நாடகக் கொட்டகையில் சென்ற மாதம் 30-ந் தேதியன்று சனாதன தர்மிகள் மகாநாடு என்பதாக சுயநல வெறியர்கள் மகாநாடு ஒன்று கூட்டப்பட்ட விஷயத்தை யாவரும் தெரிந்திருக்கலாம். அதில் முக்கிய மாய் மனு தர்ம சாஸ்திரத்தை நிலைநாட்டுவதையே கவலையாகக் கொண்டு அதற்கு வேண்டிய முயற்சிகளும் செய்யப்பட்டு அதை அனுசரித்த பல தீர்மானங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. இதை நினைக்கும் போது இன்றைய தினம் நாம் வெள்ளைக்காரர்களுடைய அரசாட்சியிலும் அவர்களுடைய ராணுவக் காப்பிலும் இருப்பதற்கு நம்மை நாமே பாராட்டிக் கொள்ள கடமைப் பட்டவர்கள் ஆவோம். இந்தப்படி நாம் சொல்லுவதைப் பற்றி பொறுப்பும் கவலையுமற்ற சிலர் நம்மீது ஆத்திரப்பட்டாலும் படுவார்கள். ஆனால், உண்மையிலேயே துணிந்தவர்கள் யாரோ சில பொறுப்பற்றவர்களுடைய ஆத்திரத்துக்குப் பயப்படுவார்களேயானால் அது முன்னுக்குப் பின் முரணாகத் தான் முடியும். ஆகையால், அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. நிற்க; மேற்படி மகாநாட்டுக்குத் தலைமை வகித்த கல்கத்தாவிலுள்ள ஒரு “தேசியவாதி” யாகிய திரு.சியாம்சந்திர சக்கரவர்த்தி என்னும் ஒரு வங்காளத்துப்...

பார்ப்பனரல்லாதார் கவனிக்க வேண்டிய விஷயம் 0

பார்ப்பனரல்லாதார் கவனிக்க வேண்டிய விஷயம்

நமது தலைவர் பனக்கால் அரசர் காலமான பிறகு கக்ஷி நிலையைப் பற்றிய உண்மைகளை பார்ப்பனரல்லாத மக்கள் எல்லோரும் உணர்ந்திருக்க வேண்டியது அவசியமாகும். தலைவர் பட்டத்திற்கு யார் வருவது என்பது பற்றிய யோசனை ஒவ்வொருவர் மனதிலும் ஊசலாடுவது அதிசயமல்ல. சில பிரமுகர்கள் தாங்கள் தலைவராகவேண்டும் என்று ஆசைப் படுவதிலும் அதிசயமொன்றுமில்லை. அவரவர்களுக்கு வேண்டிய நண்பர்களை தலைவராக்க முயற்சிப்பதிலும் அதிசயமொன்றுமில்லை. ஆனால் நமக்கு இப்போது அவசரமாய் ஆகவேண்டிய காரியமென்ன வென்றால், “ஜஸ்டிஸ்” “திராவிடன்” பத்திரிகைகள் நடக்க வேண்டும், ஆங்காங்கு இயக்க பிரசாரங்களும் ஸ்தாபனங்களும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பனவே. தற்காலம் “ஜஸ்டிஸ்” “திராவிடன்” கட்டடத்தின் மீதுள்ள 75000 ரூ. கடன் தீர்க்கப்பட வேண்டும். இது ஒரு விதத்தில் முடிவு பெற்றாலொழிய அடுத்து வரும் தேர்தலில் நாம் நிலை கொள்ள முடியாது என்பது நிச்சயம். அது மாத்திரமல்லாமல் நமது ஸ்தாபனமும் செல்வாக்கோடு இருக்க முடியாமல் போய்விடும் என்று கூடச் சொல்லுவோம். திரு. காந்திக்கும் காங்கிரசுக்கும் இன்றைய...

திருவல்லிக்கேணியில் யதீந்திரதாஸ்  வாசக சாலை திறப்பு விழா 0

திருவல்லிக்கேணியில் யதீந்திரதாஸ் வாசக சாலை திறப்பு விழா

தலைவரவர்களே! அன்புள்ள நண்பர் அவர்களே! இன்று திறப்பு விழா கொண்டாடும்படி இந்த பல பாஷை சொல்லிக் கொடுக்கும் முதலிய காரியங்கள் செய்யும் வாசக சாலையை நான் திறந்து வைக்கவேண்டும் என்று எனது பழைய நண்பர்கள் பலர் கேட்டுக் கொண்டதை நான் ஒரு பெருமையாய்க் கருதி அத் தொண்டாற்றவே இங்கு வந்துள்ளேன். எனினும் இத்திறப்புக் கொண்டாட் டத்தை நான் நடத்துவதின் மூலம் எனக்குக் கிடைத்த பெருமையைவிட நான் இங்கு வந்து எனது பழைய நண்பர்களை சந்தித்து அளவளாவ சந்தர்ப்பம் கிடைத்ததே எனக்கு மிகுதியும் பெருமகிழ்ச்சியைக் கொடுக்கத்தக்கதாகும். இந்த விழாவிற்கு இன்னார் வந்து சொற்பொழிவாற்றுவார்கள் என்று சொன்னவுடன், யான் எவ்வித யோசனையும் செய்யாமல் உடனே வருவதாக ஒப்புக் கொண்டேன். இந்தப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டுமே என்கின்ற ஆசை எனக்கு வெகு நாளாகவே இருந்து வந்தது. என்னுடைய ஆசையும் அக்கிராசனர் ஆசையும் இவ்விழாவுக்கு முக்கியஸ்தர்களான திருவாளர்கள் ராமச்சந்திர சர்மா, மதுரை சுப்பிரமணிய அய்யர் ஆகியவர்கள்...

காங்கிரஸ் புரட்டைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள் 0

காங்கிரஸ் புரட்டைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்

கல்கத்தாவில் இது சமயம் கூடிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் என்னும் கூட்டம் இந்த வருஷத்திய மற்றொரு ஏமாற்றுத் திருவிழா என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு வருஷமும் நமது இந்தியப் பாமரமக்கள் ஆயிரக்கணக்காகக் கூட்டம் கூடுவதும் நாலைந்து கூட்டுக் கொள்ளை சுயநல ஆசாமிகள் சேர்ந்து இப்பாமர மக்கள் ஏமாறும்படி ஜாலவித்தைபோல் இரண்டொரு சதியாலோசனைத் தீர்மானங்கள் செய்வதும் “அதற்குள் இதுவும் இருக்கின்றது, இப்படியும் சொல்லலாம் அப்படியும் சொல்லலாம், எனினும் பொருந்தும், அதற்கு இதுவே முதற்படி, முதற்படிக்கும் இதுவே முதற்படி” என்பது போன்ற தந்திரவார்த்தைகளால் அத்தீர்மானங்களை அரண் செய்வதும், வாலிபர்களை இளம் பெண்களைக் காட்டி ஏமாற்றுவது போல் பாமர மக்களை திரு காந்தியவர்களைக் காட்டி ஏமாற்றி வருவதுமே காங்கிரஸ் நாடகமாக நடத்திக் காட்டப்பட்டு வருகின்றது. இதைப் போன்ற ஒரு மோசமான ஏமாற்றுத் திருவிழா நமது நாட்டில் வேறு எதன் பேராலும் நடத்தப்படுவதாகச் சொல்ல முடியாது. பார்ப்பனர்களோ, அல்லது ஆங்கிலம் படித்து உத்தியோகத்திற்கு காத்திருக்கும் படித்தவர்கள் என்பவர்களோ, அல்லது...

நமது பத்திரிக்கை 0

நமது பத்திரிக்கை

‘குடி அரசு’ பத்திரிகையானது அபிமானிகள் பெருக்கத்தால் வாராவாரம் கிட்டத்தட்ட 10000 பதினாயிரம் பிரதிகள் வரை பதிப்பிக்க வேண்டியிருப்பதாலும், சமீப காலத்திற்குள் பதினாயிரம் பிரதிகளுக்கு மேல் அச்சுப்போட வேண்டியிருக்குமாதலாலும். தற்போது நம்மிடம் இருக்கும் அச்சு இயந்திரம் அவ்வளவு பிரதிகள் அச்சியற்றபோதுமானதாய் இல்லாத தாலும், இதற்காக வாங்கப்பட்ட மற்றொரு பெரிய அச்சியந்திரம் ‘திராவிடன்’ பத்திரிகையின் வாசகர்களின் பெருக்கத்தால் ‘திராவிட’னுக்கு வேண்டியிருந் ததாலும் கொஞ்சநாளைக்கு “குடி அரசை” 16 பக்கத்துடனே வெளிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. என்றாலும் இதனால் வாசகர்களுக்கு அதிகமான குறை ஏற்படாதிருக்கும் பொருட்டு இப்போது விளம்பரத்திற்காக உபயோகப்படுத்திவரும் சுமார் 7, 8 பக்கங்களை இனி 3 அல்லது 4 பக்கங் களுக்கு அதிகப்படாமல் செய்து விட்டு சற்றேக்குறைய 12 அல்லது 13 பக்கங் களுக்கு குறையாத விஷயங்கள் வெளியாக்க உத்தேசித்திருக்கின்றோம். இதனால் ஒரு சமயம் விளம்பர வியாபாரிகளுக்கு சற்று அதிருப்தி இருக் கலாம்; ஆனாலும் அவர்களையும் திருப்தி செய்ய சீக்கிரத்தில் ஏற்பாடு செய்யப்படும்....

மறைந்தார் நமதருமைத் தலைவர்! எனினும் மனமுடைந்து போகாதீர் 0

மறைந்தார் நமதருமைத் தலைவர்! எனினும் மனமுடைந்து போகாதீர்

தேடற்கரிய ஒப்பு உயர்வு அற்ற நமதருமைத் தலைவர் கனம் பனகால் ராஜா சர். ராமராய நிங்கவாரு திடீரென்று நம்மை விட்டு சனிக்கிழமை இரவு 1 மணிக்கு பிரிந்துவிட்டார் என்கின்ற சங்கதியைக் கேட்டவுடன் பொதுவாக இந்திய மக்களுக்கும் சிறப்பாக தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாத மக்களுக்கும் ஏற்பட்ட அதிர்ச்சிக்கும் துக்கத்திற்கும் அளவே இருக்காது. ஒரு நல்ல நெருக்கடியான சந்தர்ப்பத்தில் தலைவரின் காலம் முடிவு பெற்றதால் பெரியதும் திறமையானதுமான ஒரு யுத்தம் முனைந்து வெற்றி குறியோடு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், போர் வீரர்கள் சேனாதிபதியின் ஆக்ஞையை எதிர்பார்த்து திரும்பியபோது சேனாதிபதி இறந்து போய் விட்டார் என்கின்ற சேதி கிடைக்குமானால், அந்தச் சமயத்தில் அப்போர் வீரர் களின் மனம் எப்படி துடிக்குமோ அதுபோல் நமது தமிழ் மக்கள் துடித்திருப் பார்கள் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. திரு. ராஜா சாஹேப் அவர்கள் நம் தேசத்தில் உள்ள மற்ற பெரும்பான்மையான தலைவர்கள் என்பவர்களைப் போல் கவலையும் பொறுப்பும் இல்லாமல் கூட்டத்தில்...

இந்திய ராஜாக்களும் மடாதிபதிகளும் 0

இந்திய ராஜாக்களும் மடாதிபதிகளும்

சென்ற வாரத்திற்கு முந்திய வாரத்தில் “இந்தியக் கடவுள்கள்” என்ப தைத் தலையங்கப் பெயராகக் கொண்டு ஒரு தலையங்கம் எழுதியிருந்தோம். அதாவது இந்தியாவில் உள்ள பதினாயிரக்கணக்கான கோயில்களில் ஒன்றாகிய திருப்பதி கோயில் என்கின்ற ஒரு கோயிலுக்கு மாத்திரம் வருடம் ஒன்றுக்கு 20 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட வரும்படி உள்ளதென்றும், இந்த வருமானம் பெரிதும் யாத்திரைக்காரர்களால், அதாவது, இமயமலை முதல் கன்னியாகுமரி வரையிலிருந்து செலவு செய்து வரும் யாத்திரைக்காரர்களால், காணிக்கையா கவும் வேண்டுதலை என்னும் பெயரால், தங்கம், வெள்ளி, ரத்தினங்கள் ஆகிய நகைகள் முதலிய அரும் பொருள்களாகவும் மற்றும் பலவாறாய் கொடுக்கப் படுகின்றதென்றும், மேலும் திருப்பதி என்கிற இந்த ஒரு வேதஸ்தானத்திற்கு மாத்திரம் கட்டிடம், நகை, வாகனம், சாமான், பூமி ஆகியவைகளில் ஏழு கோடி ரூபாய்க்கு மேல்பட்டும் மதிப்பிடக்கூடிய சொத்துக்கள் முடக்கமாய் இருக்கின்ற தென்றும், இவைகளால் மொத்தத்தில் கிட்டத்தட்ட ஆண்டு ஒன்றுக்கு ஒருகோடி ரூபாய் போல் திருப்பதி வெங்கிடாசலபதி சாமியால் மாத்திரம் ஏழை இந்திய...

இராமாயணமும் பார்ப்பனீய தந்திரமும் 0

இராமாயணமும் பார்ப்பனீய தந்திரமும்

முதலாவது திரு.ஆச்சாரியார் இராமாயணத்தை ஒரு மத சம்பந்தமான புஸ்தகமாய் கருதுகின்றாரா? அல்லது இலக்கிய சம்பந்தமான ஒரு பொது கதை புஸ்தகமாய் கருதுகின்றாரா? என்பதே நமது கேள்வி. ஒரு சமயம் அவர் அதை இலக்கிய நூலாகக் கருதுவதாயிருந்தால் அந்தப்படி கம்பராமாயணத்தை மாத்திரம் கருதுகிறாரா? அல்லது வால்மீகி இராமாயணத்தையும் சேர்த்து கருதுகிறாரா? அல்லது இரண்டையுமே கருதுகின்றாரா என்பதே இரண்டாவது கேள்வியாகும். நிற்க, திரு.ஆச்சாரியார் தனது பிரசங்கத்தில் “இராமாயணம் நடந்த கதை அல்ல” என்று ஒப்புக் கொண்டுவிட்டார். ஆனால் அதைப் பற்றி மற்றவர்கள் விவகரிப்பது தப்பு, மூடத்தனம் என்கின்றார். இந்த புத்தி இவர்களுக்கு இவ்வளவு நாளாக எங்கு போயிற்று என்று கேட்கின்றோம். இராமாயணம் பொய் என்று நாம் சொன்ன காலத்தில் நம்மை நாஸ்திகர்கள் என்று சொன்ன இந்தக் கூட்டத்தார்கள் இப்போது தாங்களாகவே இராமாயணம் பொய், அதைப்பற்றி ஒன்றும் பேசாதீர்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் இப்போது இவர்களுக்கு ஏன் வந்தது? என்று பார்ப்போமானால். இராமாயணக் கதை...

திருப்பதி வெங்கிடாசலபதியின்  நன்றி கெட்ட தன்மை 0

திருப்பதி வெங்கிடாசலபதியின் நன்றி கெட்ட தன்மை

திருப்பதி வெங்கிடாசலபதி என்னும் கடவுளால் நமது நாட்டிற்கு உள்ள நஷ்டத்தைப் பற்றி சென்ற வாரம் தெரியப்படுத்தி இருந்தோம். அதாவது, மக்களுக்கு வருஷத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் போல் செலவு ஆவதைப் பற்றியும் சுமார் 7,8 கோடி ரூபாய் சொத்து வீணாகிறது என்பது பற்றியும் எழுதி இருந்தோம். தேசத்துக்கு இவ்வளவு நாசத்தை உண்டாக்கி இவ்வளவு பூசையும், உற்சவத்தையும், நகையையும், வாகனங்களையும், பூமியையும், கட்டிடங் களையும், ஜமீன்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் கடவுள் சற்றாவது யோக்கியப் பொறுப்பின்றியும் நன்றி அறிதலின்றியும் நடந்து கொள்வதைக் கண்டால் அந்த மாதிரிக் கடவுளை நமது நாட்டில் வைத்திருப்பது முட்டாள் தனமும் பேடித்தனமும் ஆகும் என்பதே நமது அபிப்பிராயம். ஏனெனில், இவ்வளவு போக, போக்கியத்தையும் அனுபவித்துக் கொண்டு அந்தக் கடவுளின் வேலையை பார்த்து வருபவரும், கடவுளுக்கே தந்தை என்றும், மகன் என்றும் சொல்லத் தகுந்தவருமான மகந்து என்பவருக்கு பைத்தியம் பிடிக் கச் செய்து அவருடைய சிஷ்யர்களையும் ஜெயிலில் அடைக்கச் செய்து...

மணமுறையும் புரோகிதமும் 0

மணமுறையும் புரோகிதமும்

ஆண்பெண் வாழ்க்கை இன்பத்திற்கு இவ்விருபாலார்க்கும் இயற்கை ஒப்பந்தம் ஒன்று, என்று மனித சமூகம் உற்பத்தியானதோ அன்று முதல் தானாகவே இருந்து வருகின்றது. மனித சமூகம் பரவி விரிந்து நெருக்கமானதும், பெண்கள் கருப்பவதிகளாய் இருக்கும் காலத்து அவர்கட்கு ஒரு பாதுகாப்பு ஏற்படவேண்டும் என்ற முறையிலும், மனித சமூகத்தில் சிக்கன நெருக்கடி ஏற்பட்டு அதனால் பேராசை, வஞ்சகம், சோம்பேறித்தனம் முதலியவைகள் உட்புகுந்துவிட்டமையாலும் பொதுசனங்கள் அறிய இவ்விருபாலர்க்கும் மணவினை ஏற்படுதல் அவசியமாயிற்று. இன்றேல், பெண்கள் ஏமாற்றப் படுவார்கள் என்பது திண்ணம். மேலும் குழந்தைகள் சதிபதிகட்கும் பொது வாதலால், குழந்தைகளைப் பொறுத்தவரையிலாவது தந்தையின் பொறுப்பு விளக்கமாகத் தெரிய வேண்டிய அளவிலும் மணவினை பொது சனங்கள் அறிய நிகழ்த்தப்பட வேண்டியது அவசியமாயிற்று. எனவே, உலகத்தில் மிகச் சாதாரணமானதும் அதே சமயத்தில் மிகப் பெரியதுமான இவ்வாண் பெண் இணக்கம் மணம் என்ற பெயருடனும், பொது நிகழ்ச்சி என்ற நிபந்தனையுடனும் நாகரிகம் முதிர்ந்த சமூகங்களால் கையாளப்பட்டு வருகின்றன. ஆதித்தமிழர் கள் தங்கள்...

கார்ப்பொரேஷன் தலைவர் தேர்தல் 0

கார்ப்பொரேஷன் தலைவர் தேர்தல்

சென்னை கார்ப்பொரேஷனுக்கு இம்மாதம் 12-ந் தேதி நடந்த தலைவர் தேர்தலில் திருவாளர் ஏ.இராமசாமி முதலியார் அவர்கள் பெருவாரியான ஓட்டுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது கேட்டு மகிழ்ச்சி அடைகின்றோம். சென்ற வருஷத்தேர்தல் போலவே இவ்வருஷமும் ஜஸ்டிஸ் கட்சிக்குள்ளாகவே இரு கனவான்கள் போட்டி போட்டு ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்குள்ளும் பிரிவினை ஏற்பட்டு அவர்களில் இரு கட்சிக்கு வேலை செய்யப்பட்டு தேர்தல் நடந்தேறியதை குறித்து விசனப்படாமலிருக்க நம்மால் முடியவில்லை. தேர்தலுக்கு இரண்டு வாரத்திற்கு முன்னால் நாம் எழுதியது போல ஜஸ்டிஸ் கட்சிக்கு நெல்லூரில் புதியதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் இவ்விஷயத் தில் சிறிது தலையிட்டு யாராவது ஒருவர் தான் நிற்க வேண்டுமென்பதாக முடிவு செய்தோ அல்லது மற்ற பிரமுகர்களையும் சேர்த்து ஒரு முடிவு செய்தோ இருப்பாரானால் இச்சம்பவம் நேர்ந்திருக்காதென்பது நமது துணிபு. அபேட்சகர் கள் இருவரும் தலைவருடைய தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை என்பதற்காக தலைவர் தனது முடிவை தெரியப்படுத்தவில்லை என்பதாக சொல்லப்படு வதானாலும் இம்மாதிரியான முக்கிய விஷயங்களில் நெருக்கடியான நிலைமை யைக்...

சென்னை மந்திரிகளை பின் பற்றுதல் 0

சென்னை மந்திரிகளை பின் பற்றுதல்

சென்னை மாகாண சுகாதார மந்திரி திரு.எஸ்.முத்தையா முதலியார் அவர்கள் மதுவிலக்கு விஷயமாய் கவர்ன்மெண்டாரின் கொள்கையை திட்டப்படுத்தவும் மக்களுக்கு மதுவிலக்கில் அதிக முயற்சி உண்டாக்கவும் வருஷம் ஒன்றுக்கு நாலு லட்ச ரூபாய் போல் செலவு செய்து நாட்டில் மதுவிலக்குப் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்தது யாவருக்கும் தெரிந்ததாகும். அதை இந்நாட்டுப் பார்ப்பனர்கள் கண்டு உண்மையில் நமது நாட்டில் மதுவிலக்கு ஏற்பட்டுவிட்டால் எங்கு அதனால் பிழைக்கும் தங்களது உத்தியோகத் தொழிலும் வக்கீல் தொழிலும் மற்றும் மதுபானத்தின் பலனாய் ஏற்படும் பலவிதத் தொழிலும் நின்றுவிடுமோ எனக்கருதி பலவித தந்திரத்தாலும் மந்திரி கனம் முத்தையா முதலியாருக்குக் கெட்ட எண்ணம் கற்பித்தும், கவர்ன்மெண்டை தூண்டி முத்தையா முதலியாரின் கொள்கையை ஒப்புக்கொள்ளாமல் இருக்கச் செய்ய முயற்சித்தும் பயன்படாமல் போய் இப்போது சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கு பிரசாரம் நடை பெறுவதும் யாவருக்கும் தெரிந்ததாகும். தவிர, காந்தி மடத்தின் சட்டாம் பிள்ளையாகிய திரு. இராஜகோபாலாச்சாரியார் தினமும் இந்தக் கொள்கை யையும் பிரசாரத்தையும்...

பெண்கள் விடுதலைக்கு  ஜே! ஜே!! ஜே!!!  பஞ்சரத்தினம் 0

பெண்கள் விடுதலைக்கு ஜே! ஜே!! ஜே!!! பஞ்சரத்தினம்

உலகத்தில் எங்குமே பெண்கள் தாழ்த்தப்பட்டிருக்கின்றார்கள். நமது நாட்டில் அவர்கள் மனிதப் பிறவியாயிருந்தும் மிருகங்களிலும் கேவலமாய் நடத்தப்படுவதும் அவர்கள் ஆண்களின் காம இச்சை தணிக்கும் கருவி யாகவும், பிள்ளைபெறும் யந்திரமாகவும், ஆண்களுடைய சொத்துக்களில் ஒன்றாகவும், தகப்பன் என்பவனாலும் சகோதரன் என்பவனாலும் புருஷன் என்பவனாலும் பெண்கள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கவோ விற்கவோ வாடகைக்கு விடவோ தனது சுயநலத்துக்காக மற்றவர்களுக்குக் கூட்டிக் கொடுக்கவோ கூட சுவாதந்தரியமுள்ள வஸ்துக்களாகவும் பாவிக்கப் பட்டு வருகின்றனர். அவர்களை விலைக்கு வாங்கியவர்கள் மற்றவர்க்கு கூலிக்கு விபசாரத்திற்கு விட்டு பணம் சம்பாதிக்கும் ஒரு யந்திரமாகவும் உபயோகப்படுத்தி வருகின்றனர். இத்தகைய கொடுமைகள் அநேகமாய் மதத்தின் பேராலும் தர்ம சாஸ்திரத்தின் பேராலும் கடவுள் பேராலும் நடை பெற்றுவருவதும் மிகவும் கவனிக்கத்தக்கதாகும். ஆனால் நமது நாட்டைத் தவிர மேல் நாடுகளில் இக்கொடுமைகள் வரவரக்குறைந்து அவர்களுக்குச் சுதந்திரம் வளர்ந்து வருகின்றது. உதாரணமாக அமெரிக்க நாட்டில் பெண்கள் ஆண் களைப்போலவே கோடிக்கணக்கான ரூபாய்கள் சொத்துக்களுடனும் சுதந்திரத் துடனும் ஆயிரக்கணக்காக வாழ்கின்றார்கள்....

இராமாயணமும் பார்ப்பனீய தந்திரமும் 0

இராமாயணமும் பார்ப்பனீய தந்திரமும்

இராமாயணம் என்னும், ஒரு பார்ப்பனீயத்திற்கு ஆதாரமான புராணத்தை பார்ப்பனர்கள் சர்வ வல்லமையுள்ள “கடவுளாகிய” மகாவிஷ்ணு என்பவரின் அவதாரமாகிய ராமன் என்னும் ஒரு கடவுளின் சரித்திரமென்றும், அதில் கண்ட விஷயங்கள் எல்லாம் அப்படியே நிகழ்ந்தது என்றும், அந்த ராமன் நடந்து கொண்டதாக அப்புராணத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள் எல்லாம் கடவுளால் உலக நன்மையின் பொருட்டு துஷ்ட நிக்கிரகம் சிஷ்ட பரிபாலனத்திற்காக நடத்தப்பட்ட உண்மையான நடவடிக்கைகள் என்றும், இந்திய மக்களுக்குப் பார்ப்பனர்களால் போதிக்கப்பட்டு பழைய காலத்தில், ஒரு பார்ப்பனரல்லாத வித்துவானைக் கொண்டு அந்த புராணத்தை அதுபோலவே, அதாவது ராமன் கடவுள் அவதாரம் என்ற கொள்கைப் படியே, ஒரு காவியம் பாடச்செய்து, அதை வழக்கத்திலும், நித்திய வாழ்க்கையிலும் இராமாயணம் படிப்பதும் கேட்பதும் “புண்ணியம்” என்றும், “மோட்சம்” தரத்தக்கதென்றும் சொல்லி ஏமாற்றி, இந்திய மக்களைத் திண்ணைகள்தோறும் இராமாயண காலட்சேபமும், சீதா கல்யாண உற்சவமும், பட்டாபிஷேக உற்சவமும் செய்யச் செய்து, அதனால் ஏற்படும் வருமானம் எல்லாம் பார்ப்பனக் குதிருக்கே போய்ச்...

இந்தியாவின் பிரதிநிதிகள் யார்? 0

இந்தியாவின் பிரதிநிதிகள் யார்?

மேன்மைதங்கிய ராஜப்பிரதிநிதியாகிய லார்ட் இர்வின் அறிக்கை யானது இந்தியாவுக்கு முதன் முதல் செய்த நன்மை என்னவென்றால், இந்தியாவின் உண்மையான பிரநிதிதித்துவம் பொருந்திய தலைவர் யாரும் இல்லை என்பதை நன்றாய் வெளிப்படுத்தி விட்டமையே. லார்ட் இர்வின் அறிக்கை வெளியாகாதிருந்திருக்குமானால், இந்தியா வின் கவுரவம், (இல்லையானாலும்), சற்றாவது காப்பாற்றப்பட்டிருக்கலாம். ஆனால், அது வெளியான பிறகு இப்போது மிகவும் கேவல நிலைமைக்கு வந்துவிட்டது. அறிக்கை வெளியானவுடன் வெகு அவசர அவசரமாய் ‘தலைவர்’ ஒன்று கூடி அதை பாராட்டுவதாகவும், ஒப்புக் கொண்டதாகவும் தீர்மானித்து பல ‘தலைவர்’களிடம் அவசர அவசரமாக கையெழுத்தும் வாங்கி ஆய்விட்டது. இவ்வறிக்கையை லண்டனுக்கு அனுப்பி இருந்தாலும் அவர்களும் குப்பைத் தொட்டியில்தான் போட்டிருப்பார்கள். ஆனால், நல்ல சம்பவமாய், அது இந்தியக் குப்பைத் தொட்டிக்கே போய்ச் சேரும்படி ஆகி விட்டது. என்னவென்றால், வழக்கம்போல் அறிக்கைக்கு கையெழுத்தான மறு நாளிலிருந்தே ஒவ்வொரு தலைவர்களும் வியாக்கியானம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். திரு.காந்தி, நான் இன்ன கருத்தின் மேல்தான் அறிக்கையை தயார்...

இந்தியக் கடவுள்கள் 0

இந்தியக் கடவுள்கள்

இந்த வாரம் அதாவது நவம்பர் மாதம் 11-ம் தேதி வெளியான “சுதேசமித்திர”னின் பதினோராவது பக்கத்தில் “திருப்பதி வெங்கிடாசலபதி” என்கின்ற கடவுளின் தேவஸ்தான வருஷாந்திர வரவு செலவு (பாலன்ஸ் ஷீட்) கணக்கு வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றது. அதில் இந்த ஒரு வருஷத்திற்கு, அதாவது, 1337ம் பசலிக்கு மேற்படி தேவஸ்தானத்திற்கு ஒட்டு மொத்தம் இருபத்திரண்டே முக்காலே அரைக்கால் லட்ச ரூபாய் வசூலாயிருக்கின்றது. இந்த ரூ.22,82,695 – 8-9 பைசாவுக்கும் செலவும் காட்டப்பட்டிருக்கின்ற விவரமென்ன வென்றால், ஆறு லட்சத்துச் சில்லறை ரூபாய் நிலுவை மொத்தம் என்று காட்டப்பட்டிருப்பது போக மீதி பதினாறு லட்சத்து சில்லறை ரூபாய்க்கும் காட்டப்பட்டிருக்கும் செலவுகளைப் பார்த்தால், இந்து மதமும், இந்துமதக் கடவுள்களும் நமது இரத்தத்தை எப்படி உறிஞ்சுகின்றது என்பது முழு மூடர்களுக்கும் எளிதில் விளங்கும். அதாவது :- கோயில்களுக்குக் கொடுத்தது              ரூ. 23,515 படித்தர சாமான் வாங்க              ரூ. 1,38,932 பழுதுகள்              ரூ. 4,55,701 சமஸ்கிருத ஆங்கில வித்யாசாலை              ரூ. 1,07,941 சிப்பந்திகள்             ...

செங்கல்பட்டில்  தமிழ்நாட்டு சுயமரியாதை மகாநாடு 0

செங்கல்பட்டில் தமிழ்நாட்டு சுயமரியாதை மகாநாடு

தமிழ்நாட்டு சுயமரியாதை மகாநாட்டை செங்கல்பட்டு ஜில்லாவில் கூட்ட வேண்டுமென்று செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் முடிவு செய்தி ருப்பதாக பத்திரிகைகளில் காண நாம் மிகுதியும் மகிழ்ச்சியுடன் அவ்வபிப் ராயத்தை வரவேற்கின்றோம். தற்காலம் அரசியல் புரட்டாலும், மதவியற் புரட்டாலும் கஷ்டப் பட்டும், பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் வஞ்சிக்கப்பட்டும், பகுத்தறிவும் தன்மதிப்பும் இழந்து தவிக்கும் நாட்டிற்கும் பாமர மக்களுக்கும் சுயமரியாதை இயக்கமே ஒருவாறு புத்துயிரளித்து வருகின்றது என்பது நடு நிலைமை கொண்ட அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயமேயாகும். அப்பேர்பட்ட இயக்கத்தை நாடு முழுவதும் பரவச் செய்வதன் மூலம், மக்களுக்கு உண்மையை உணர்த்தி தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பி ஊக்கமூட்டி நிலைத்த உணர்ச்சியை உண்டாக்கவும், அடிக்கடி ஆங்காங்கு மகாநாடுகள் கூட்டி குறைகளை வெளிப்படுத்தியும் பல அறிஞர்களின் உபதேசத்தைக் கேட்கச் செய்தும் நாட்டில் தீவிர பிரசாரம் செய்யவும் வேண்டியது மிகவும் அவசியமானது என்பதும், இது ஆங்காங்குள்ள தலைவர்களுடையவும், பிரமுகர்களுடையவும் கடமையானதுமான காரியம் என்பதும் நாம் சொல்லாமலே விளங்கும். இதுவரை பல...

புதிய சகாப்தம் 0

புதிய சகாப்தம்

திரு.கோகலே, ரானடே, தாதாபாய் நௌரோஜி முதலிய தலைவர்கள் நம் இந்தியாவில் ஒரு சுதந்திர தாகத்தை உண்டுபண்ணிவிட்டார்கள் என்று பொதுவாக நாமறிவோம். இது முதற்கொண்டுதான் நம் நாட்டில் சுதந்திர கிளர்ச்சியும் ஒரு பொது உணர்ச்சியும் ஏற்பட்டது என்பதையும் மறக்கமுடியாது. ஆனால் அது செயற்கைக் கிளர்ச்சியாகவும், இயற்கைக்கு மாறுபாடானதாகவும் இருந்ததனாற்றான், இருப்பதனாற்றான் இன்று வரையில் இவ்விந்தியா சுதந்திரம் அடையமுடியாமல், பெர்க்கன் ஹெட் பிரபுவின் இழிதகையான பழிச் சொற்கட்கும், ஆதிக்க வெறிச் சொல்லுக்கும் இலக்காய் இருக்கிறது. ஏனெனில், நம்மிடை பிரசாரத்தின் பயனாய் பரவுதல் செய்யப்பட்ட சுதந்திர உணர்ச்சியானது ‘தேசியம்’ என்று கூறப்பட்ட போதிலும்கூட ஒரு மிகக் குறுகிய வகையில் இயக்கப்பட்டு வந்தது உண்மையானதாகும். என்னை? இதுவரையில் நடைபெற்ற கிளர்ச்சி, சுதந்திரப் போராட்டம், ஒத்துழையாமை, வரிகொடாமை, பகிஷ்காரம் இவைகட்கு எல்லாம் அடிப்படையாய் இருந்தது நிறவேற்றுமை என்பதில் ஐயமில்லை. எப்பொழுது வெள்ளையர்கள் நம்மை அதிக ஈனமாய் நடாத்துகின்றார்கள் என்று நாம் நினைக்கின்றோமோ, அப்பொழுதெல்லாம் ஒரு கிளர்ச்சி செய்வதும், பின்னர்...

நாஸ்திகம் 0

நாஸ்திகம்

(தூய வெழிலழகனார் எழுதி சித்திரபுத்திரன் திருத்தியது) மகன் :- அம்மா! இதென்ன விபரீதம்? நமது தந்தை சதா சர்வகாலம் “குடி அரசு” “குடி அரசு” என்று “குடி அரசு”ம் கையுமாகவே இருந்து சதாகாலமும் படித்துக் கொண்டு வந்தது போதாமல் இப்போது “குடி அரசு” ஆபீசுக்கே போய்ச் சேர்ந்து விட்டாரே இதென்னம்மா! அநியாயம்! அவருக்கு நாஸ்திகம் தலைக்கேறிவிட்டது போல் இருக்கின்றது. தாய் :- மகனே! இவ்வாறு கேட்பதற்குக் காரணமென்ன? “குடி அரசு” பத்திரிகை நாம் இழந்த சுயமரியாதை, அறிவு, செல்வம், நாடு ஆகியவை களை மறுபடியும் பெறுவதற்கு வேண்டிய வேலை என்ன? என்ன செய்யவேண்டுமோ அவைகளை உயிர்க்கு துணிந்து செய்து கொண்டும், மனிதர்களுக்குள் பரவி நிற்கும் மூட நம்பிக்கைகளை ஒழிக்கவே இவ்வுலகமெங்கணும் வெற்றிக் கொடியோடு உலவிக் கொண்டும் வருகின்றது. உமது தந்தை அக் ‘குடி அரசின்’ கொள்கைகளை நன்கு அறிந்தவராதலால், நான்தான் அங்கே போய் அதற்கு ஏதாவது உதவி செய்யலாமே எனக்கருதி போகும்படி...

இர்வின் பிரசங்கம் 0

இர்வின் பிரசங்கம்

ராஜப் பிரதிநிதியாகிய லார்ட் இர்வின் அவர்கள் சீமைக்குப் போய்விட்டு வந்து வெளியிட்ட அரசியல் அறிக்கையை இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் வாதிகளும் ஒப்புக்கொண்டு பாராட்டி இருப்பதோடு, பலர் அதற்காக தங்களுடைய நன்றியறிதலையும் காட்டிவிட்டார்கள்; காட்டிக் கொண்டும் இருக்கிறார்கள் என்றாலும் இதிலிருந்து முக்கியமாக இரண்டு காரியங்கள் நிறுத்தப்பட்டுவிடும் என்பது உறுதியான செய்தியாகும். அதாவது 1929 வது வருஷம் டிசம்பர் மாதம் 31-ந் தேதி இரவு ஒரு மணிக்கு திரு.காந்தியாhர் மறுபடியும் துவக்கப்படத் “தயாராயிருந்திருக்கும்” ஒத்துழையாமையையும் அதற்கொரு மூன்று நாளைக்கு முன் அதாவது டிசம்பர் 28-ந் தேதி லாகூர் காங்கிரசில் திரு.ஜவகரிலால் நேருவால் வெளிப்படுத்த இருக்கும் பூரண சுயேச்சை விளம்பரமும் நிறுத்தப்பட்டு போகும் என்பதேயாகும். எனவே, வைசிராய் அறிக்கை அவ்விரு கனவான்களுக்கும் பெரிய விடுதலையையும் வெற்றியையும் கொடுத்தது என்பதில் நமக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. மற்றபடி அவ்வறிக்கையில் உள்ள விஷயம் என்னவென்று நிதானமாய் நடுநிலையிலிருந்து பார்ப்போமானால், எவ்வளவு சிறுகண் உள்ள சல்லடை யைப் போட்டு சலித்துத்...

கிருஷ்ணசாமி பிள்ளை மறைந்தார்! 0

கிருஷ்ணசாமி பிள்ளை மறைந்தார்!

நமது இயக்கத்திற்கு ஆரம்ப முதல் ஆதரவளித்து வந்தவரும் இயக் கத்திற்கு பணம் காசு தாராளமாய் செலவு செய்து வந்தவரும் கோயமுத்தூர் மகாநாட்டுக்கு காரியதரிசியாய் இருந்தவரும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்திற்கு காரியதரிசியும் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கும் இயக்கத் திற்கும் உண்மையான உள்ளன்போடு கூடிய உதவியாளருமான நமது உண்மை நண்பர் திரு. கோவை, நெய் மண்டி கிருஷ்ணசாமிபிள்ளை அவர்கள் காலம் சென்றது மிகவும் துக்கப்படத்தக்க சம்பவமாகும். குறிப் பாகச் சொல்ல வேண்டுமானால் அம்மாதிரியான உள்ளன்போடு உழைக்கும் மற்றொரு நண்பரை கோவையில் காணுவது மிகக் கடுமையென்றே சொல்ல வேண்டும். அவர்களின் அருமை மனைவியாருக்கும் தாயாருக்கும் தம்பிமார்களான நமது நண்பர்கள் திருவாளர்கள் சுப்பு, பஞ்சலிங்கம் ஆகியவர்களுக்கும் நமது மனமார்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். குடி அரசு – இரங்கல் செய்தி – 16.12.1928

விமல போதம் 0

விமல போதம்

ஸ்வாமி விமால நந்தா அவர்களால் தொகுக்கப்பெற்ற ‘விமல போதம்’ என்னும் நூலொன்று கிடைக்கப் பெற்றோம். இந்நூலின்கண் சித்த மதத்தை விளக்கி உரைப்பதற்கு, நூலாசிரியர் அவர்கள் அரும்பாடு பட்டிருப்பர் என்றே யாம் கருத வேண்டி இருக்கின்றது. இதிற் காயசித்தி, மனோசித்தி, அறிவு சித்தி என்னும் மூவகைச் சித்தியின் தன்மைகளையும் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஒட்டிய பல ஆராய்ச்சிகளையும் தெள்ளத் தெளிய, மந்த தரத்தாரும் உணரும் வண்ணம் ஆசிரியரவர்கள் பரந்த விஷயங்களை சுருங்க விளக்கியிருப்பது பாராட்டற்பாலதாம். நூலிற் கூறும் உண்மைகள் உண்மைகளா என்பதைப் பற்றி நூலை வாங்கிப் படிப்பவர்களே தங்கடங்கள் அறிவைச் செலுத்திப் படித்துத் துணி புறுதல் சிறப்புடைமையாதலால், இவ்விடயத்தைப் படிப்பவர்கட்கே விட்டு விடுகின்றோம். நூல் மிகத் தெளிவாகப் பதிக்கப் பெற்றுள்ளது என்றும் நூலைப் பதிப்பிக்க ஆசிரியர் எடுத்துக் கொண்ட முயற்சி சிறிதன்று என்றும், இதன் விலை அணா இரண்டே என்றும் மட்டும் வாசகர்கட்கு எடுத்துரைக்க விழை கின்றோம். நூல் சென்னை கோல்டன்...