எனக்கு வீரசொர்க்கத்தில் நம்பிக்கை கிடையாது”
110க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பெரியாரின் எழுத்தும் பேச்சும் இடம் பெற்றுள்ள தொகுதி இது. ஜஸ்டிஸ் கட்சி சட்டசபை தேர்தலிலும் சில உள்ளாட்சி தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவியதால், சுயமரியாதை இயக்கத் தோழர்கள் சிலர் காங்கிரசில் சேர துடித்த காலத்தில், ஒருவன் “வெற்றி பெற்ற” காங்கிரஸ் என்பதில் இருக்கும் அவமானத்தைவிட “தோற்றுப்போன” ஜஸ்டிஸ் கட்சி என்பதில் இருப்பது அவமானமாகாது பெரியார் இடித்துரைக்கிறார். இத்தொகுதியில் அடங்கியுள்ள “ஜஸ்டிஸ் கட்சியும் சுயமரியாதை இயக்கமும்” என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள பெரியாரின் சொற்பொழிவில்,சுயமரியாதை இயக்கத்தின் மீது சில ஜஸ்டிஸ் கட்சியினர் முன் வைத்த குற்றச்சாட்டு களுக்கு பெரியார் தெளிவாக பதில் அளிக்கிறார். “ஜஸ்டிஸ் கட்சியில் பட்ட துன்பம் கொஞ்சமல்ல. இந்த மாகாணத்திலே எனக்கு மாத்திரம் தான் சி.அய்.டி. தொல்லை. கடிதங்களை உடைத்துப் பார்ப்பது, பத்திரி கையை ஒழிக்க நினைத்து அடிக்கடி ஜாமீன் கேட்பது முதலிய காரி யங்கள் நடக்கின்றன. இவைகள் அக்கட்சியை குறைகூறக் காரணங்க ளாகாது. அக்கட்சித் தலைவர்கள்,...
