பீட்டா அமைப்பு என்ன செய்கிறது? அதிர்ச்சித் தகவல்கள்
சர்வதேச அளவில் விலங்குகளின் உரிமைக்காகப் போராடும் ஒரு நிறுவனமாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ‘பீட்டா’ நிறுவனம், 1980ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள வர்ஜினியாவில் தொடங்கப்பட்டது. செல்லப் பிராணி வளர்ப்போர், அவற்றின் மீது செலுத்தும் அன்பு மட்டுமே இந்த நிறுவனத்தின் மிகப் பெரிய மூலதனம். அந்த மூலதனத்தை, முதலீடாக மாற்றியதால் கடந்த 35 ஆண்டுகளில் 30 இலட்சம் பேர் பீட்டாவில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இலாப நோக்கு இல்லாத நிறுவனமாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் இந்த ‘பீட்டா’ ஆண்டொன்றுக்கு சுமார் 43 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டி வருகிறது. அதாவது கிட்டத்தட்ட இந்தியப் பணம் 300 கோடி ரூபாய். அமெரிக்காவில்தான் உலகிலேயே அதிகமாக செல்லப் பிராணிகள் வளர்க்கப்படுகின்றன. அங்கு அனாதையாக மீட்கப்படும் செல்லப் பிராணிகளை, உரிமையாளர்கள் 15 நாட்களுக்குள் மீட்டுச் செல்ல வில்லையென்றால், அதனைக் கருணை கொலை செய்ய சட்டம் அனுமதிக்கிறது. இப்படி கருணைக் கொலை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான நாய்கள், பூனைகளை...