Tagged: M R Radha

தடை மீறி 54 முறை கைதான புரட்சி நடிகர்

செப்.17, பெரியார் பிறந்த நாளில் தான் ‘நடிகவேள்’ இராதா முடிவெய்தினார். அவர் நினைவாக ‘மணா’ தொகுத்த ‘எம்.ஆர்.ராதா காலத்தின் கலைஞன்’ நூலிலிருந்து -சில பகுதிகள்: நடிகவேள் எம்.ஆர்.இராதா, 1942க்குப் பிறகு மறுபடியும் நாடக மேடைக்கே திரும்பினார். பொன்னுச்சாமி பிள்ளை கம்பெனியில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இழந்த காதல் நாடகத்தில் அவருடைய சவுக்கடிக் காட்சிக்குத் தனிப் பெயர் கிடைத்தது. சிவாஜி பெண் வேடத்தில் நடித்த இந்த நாடகம், வெள்ளித்திரை (திரைப்படம்) தரத் தவறிய புகழைத் தந்தது. அண்ணா உள்படப் பலர் பாராட்டினார்கள். பெரியாரும், சம்பத்தும் வந்து மனப்பூர்வமாக வாழ்த்தினார்கள். பெரியாருடன் தொடர்பு கூடியது. ‘திராவிட மறுமலர்ச்சி நாடக சபா’ என்கிற பெயருடன் இயங்க ஆரம்பித்தார் இராதா. “சுயமரியாதைக் கருத்துகளை நான் ஆராய ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே முழுவதும் அதன் வசமாகிவிட்டேன்” என்று இராதாவே உணர்வுடன் சொல்லு மளவுக்கு திராவிட இயக்கக் கருத்துக்கள் அவருடைய நாடகங்களில் வெளிப்பட்டன. விமலா அல்லது விதவையின் கண்ணீர் துவங்கி, இலட்சுமி காந்தன்,...