Tagged: Ligo

அறிவியலின் மகத்தான புரட்சி

அறிவியலின் மகத்தான புரட்சி

உலகம் ‘படைக்கப்பட்டது’; அப்படிப் படைத்தவன், எல்லாவற்றுக் கும் மேலான ‘இறைவன்’ இதுதான், அனைத்து மதங்களும் மக்களிடம் திணிக்கும் நம்பிக்கை! அறிவியல் வளர்ச்சியடையாத – அச்சத்தால் உருவாக்கப்பட்ட கடவுள், மதங்களின் கருத்துகள் ஒவ்வொன்றாக மடிந்து வீழ்ந்து வருகின்றன. அறிவியல் அனைத்துக்கும் விடைகளைத் தந்து வருகிறது. அதற்கான தேடல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. உலகம் – எப்படி உருவானது என்பதை ‘பெரு வெடிப்பு’ அறிவியல் கொள்கை யும், உயிர் எப்படி பரிணாமம் பெற்றது என்பதை டார்வின் கோட்பாடும் மனித குலத்துக்கு வழங்கிச் சென்றன. வானவெளியில் சூரியன், நட்சத்திரங்கள், கிரகங்கள், கோள்கள் பற்றிய ஆய்வுகள் தொடங்கின. இது வரை இந்த கண்டுபிடிப்புகள் வெளிச் சங்களாக பார்வையில் மட்டுமே தெரிகின்றனவாகவே இருந்தன. இப்போது அண்ட வெளியில் அதிர்வு களின் ஓசையைக் கேட்கும் மகத்தான கண்டு பிடிப்பு நிகழ்ந்துள்ளது. ‘சார்பியல் கோட்பாடு’ என்ற அறிவியல் கண்டுபிடிப்பை வழங்கிய அய்ன்ஸ்டின் 100 ஆண்டுகளுக்கு முன் ஒரு கோட்பாட்டை முன் வைத்தார். அது...