Tagged: 500

தலையங்கம் இதுதான் பார்ப்பனர்களின் தகுதி திறமையா?

மக்களின் புழக்கத்தில் 80 சதவீதமாக 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இவை செல்லத் தக்கதல்ல என்று பிரதமர்  மோடி ஒரே இரவில் அறிவித்தபோது இப்படி ஒரு அதிர்ச்சி இந்தியாவின் ‘கருப்பு பொருளாதார சந்தைக்கு’ தேவைதான் என்றே நாம் கருதினோம். நாட்டின் பொருளா தாரத்தை சர்வதேச சந்தைக்கு திறந்து விடும் உலக மயமாக்கல் கொள்கைக்குப் பிறகு அந்நிய முதலீட்டுச் சுரண்டல்கள் கருப்புப் பொருளாதார சந்தைகள் பெருகி, அரசியல் கட்சிகள், பெரும் தொழிலதிபர்கள், ‘பகாசுர கம்பெனிகள்’ கொழிக்கத் தொடங்கின. பார்ப்பன பனியா வர்க்கம் மேலும் தனது அதிகாரத்தை வலிமைப்படுத்திக் கொண்டது. இந்த நிலையில் மோடியின் இந்த அதிரடி நடவடிக்கை கருப்புப் பணச் சந்தையை முடக்குமா என்ற சந்தேகத்தை பொருளியல் நிபுணர்கள்  எழுப்பினார்கள். அவர்களின் கேள்விகளை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. ஆனாலும்கூட புழக்கத்திலுள்ள போலி ரூபாய் நோட்டுகளை இது கட்டுப்படுத்தும் என்ற அளவில் இந்த முயற்சி வரவேற்கப்பட்டது. இப்போது இந்த அதிரடியால் அவதிக்குள்ளாகி...