Tagged: 26.11.1957

தலையங்கம் 26.11.1957

தலையங்கம் 26.11.1957

பெரியார் இயக்க வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற நாள் நவ. 26, 1957. அன்றுதான் உலக வரலாற்றிலேயே ஒரு நாட்டின் அரசியல் சட்டத்தை அந்நாட்டின் ‘குடிமக்களாக’ அறிவிக்கப்பட்டவர்கள் தீ வைத்து எரித்த நாள். எரித்தவர்கள் 10,000 பேர். கைதானவர்கள் 3,000 பேர். 6 மாதத்திலிருந்து 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட அந்த போராளிகள், நீதிமன்றத்தில் எதிர் வழக்காடவில்லை. ஜாதியைப் பாதுகாக்கும் இந்த அரசியல் சட்டத்தைக் கொளுத்த எனக்கு முழு உரிமை உண்டு என்று நீதிமன்றங்களில் வாக்குமூலம் அளித்தனர். அந்தப் போராளிகள், “நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்” என்று நீதிபதி முன் நெஞ்சுயர்த்தி கூறினார்கள். அன்றைய சிறைச்சாலை கொடுமை யானது. சட்ட எரிப்பு வீரர்கள் கிரிமினல் கைதிகளாகக் கருதப்பட்டனர். மிக மிக மோசமான உணவு; மோசமான சுகாதாரம். சிறைச்சாலைக்குள்ளே உடல்நலம் பாதிக்கப் பட்டு ஜாதி...