மத்திய மனிதவளத் துறையினரின் சமஸ்கிருதத் திணிப்பு
மத்திய மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி தலைமையிலான கல்வி ஆலோசனைக் குழு, மத்திய அரசு பள்ளிகளில் சமஸ்கிருதத்தைத் திணிக்க முடிவு செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. “ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகள் மாணவர்களுக்கு தேவையாக இருப்பினும் நமது பரந்துபட்ட கலாச்சாரத்தைக் கற்பிக்கும் வகையில் சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அதற்காக 3ஆவது மொழிப் பாடமாக சமஸ்கிருதத்தைக் கட்டாயமாக்க முடிவு செய்துள்ளோம். வரும் கல்வி ஆண்டு முதல் மத்திய அரசின் கீழ்வரும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சமஸ்கிருதம் 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கட்டாயமாக்கப்படும். இதற்காக விரைவில் சமஸ்கிருத மொழி நூல்கள் அச்சிடப்பட இருக்கின்றன” என்று ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். சமஸ்கிருதத் திணிப்பு என்பது பார்ப்பனியத் திணிப்பேயாகும். இந்தியாவில் சில ஆயிரம் பேர் மட்டுமே பேசும் மொழி சமஸ்கிருதம். அதுகூட பேசும் மொழி அல்ல; கோயில்கள், சடங்குகள், யாகங்களுக்காக பார்ப்பனர்கள் மட்டுமே பயன்படுத்தும் மொழி. பல்வேறு...