Tagged: வில்வித்தை

வில்வித்தைப் போட்டியில் கழகக் குடும்பத்தின் குழந்தைகள் வென்றனர்

வில்வித்தைப் போட்டியில் கழகக் குடும்பத்தின் குழந்தைகள் வென்றனர்

சேலம் மாவட்டம் கொளத்தூர் கழக குடும்பத்தை சார்ந்த கொளத்தூர் குமார் – தமிழரசி ஆகியோரது மகன் இனியன், காவலாண்டியூர் விஜயகுமார் – கலைச்செல்வி ஆகியோரது மகன் வளவன், காவை இளவரசன் – மாதவி ஆகியோரது மகன் எழிலரசு ஆகியோர்  23.4.17 ஞாயிறு அன்று நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் ஸ்போர்ட்ஸ் பவுண்டேசன், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடத்திய மாநில அளவிலான வில் வித்தை போட்டியில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான கம்போண்ட் பிரிவில் பங்கேற்றனர். இனியன் தங்கபதக்கம் பெற்றார். 10 வயதிற்கு உட்பட்டோருக்கான கம்போண்ட்  பிரிவில் வளவன் தங்க பதக்கம் பெற்றார். 10 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்தியன் பிரிவில் எழிலரசு வெள்ளி பதக்கம் பெற்றார். இதற்கான சான்றிதழையும், பதக்கத்தையும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி புண்ணியமூர்த்தி வழங்கினார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு கழகத் தலைவர் பாராட்டுகளை தெரிவித்து குழந்தைகளுக்கு உற்சாகமூட்டினார். பெரியார் முழக்கம் 04052017 இதழ்