இதுவா, தமிழ்ப் புத்தாண்டு?
சித்திரையில் தொடங்குகிறதாம் ‘தமிழ்ப் புத்தாண்டு’. தமிழக முதல்வர் ஜெயலலிதா, இதுதுதான் தமிழர்களின் ‘புத்தாண்டு’ என்று நீட்டி முழக்குகிறார். இப்போது பிறந்துள்ள “தமிழ்” வருடத்தின் பெயர் என்ன தெரியுமா? “நந்தன” – இது தமிழா என்று கேட்டு விடாதீர்கள். வடமொழி தான்! ‘பிரபவ’ தொடங்கி ‘அட்சய’வில் முடியும் 60 ஆண்டுகளின் பெயர் களுமே சமஸ்கிருதம் தான்! மருந்துக்குக்கூடதமிழ் இல்லை. ஆனால், இதற்குப் பெயர் ‘தமிழ்’ப் புத்தாண்டாம்! இதோ 60 ஆண்டுகளின் பெயர்களைப் பாருங்கள்! பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரஜோத்பத்தி, ஆங்கிரஸ, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்ரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, ஸர்வஜித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துர்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாவசு, பராபவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதிகிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, ராக்ஷஸ,...