தந்தை பெரியார் கருத்துமரபை முன்னெடுத்த எழுத்தாளர் விந்தன்.. வீ.அரசு
இதழியல்வழி உருவாவதே குட்டிக்கதை எனும் வடிவம். பக்க வரையறைகள் இதழியலில் பல வடிவங்களை உருவாக்கியுள்ளது என்று கூற முடியும். சிறுகதையும்கூட அவ்வாறு உருவானதுதான். கல்கி இதழில் விந்தன் எழுதிய குட்டிக்கதைகள் நகைச்சுவை உணர்வு, எள்ளல் பாணி ஆகியவற்றைக் கொண்டவை. மரபான விழுமியங்களை நக்கல் செய்து, புதிய விழுமியங்களைக் குழந்தைகளுக்கு சொல்வதில் விந்தன் தனித்தவராக அமைகிறார். இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் வாழ்ந்த அ.மாதவையா(1872-1925), வ.ரா. (18891951), புதுமைப்பித்தன் (1906-1948) ஆகியோர் கரடுதட்டிப்போன சமூகக் கொடுமைகளைத் தம் எழுத்துக்களில், தோலுரித்தவர்களில் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டியவர்கள். சாதியக் கொடுமை, பெண்ணடிமை போன்றவற்றைத் தமது ஆக்கங்களில் பதிவு செய்தவர்கள். இந்த காலங்களில் சமூகத்தில் நிலவிய மூட நம்பிக்கைகள் குறித்து தம் ஆக்கங்களில் பதிவு செய்த எழுத்தாளர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா?என்பது விவாதத்திற்குரியது. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் மூடநம்பிக்கைக்கு எதிரான பல படைப்பாளிகள் தமிழில் உருவாகிவிட்டனர். அவர்களில் தற் போது நூற் றாண் டு நிறைவெய்தியிருக்கும்...