Tagged: விதவை

“விதவைகள்” சடலங்களை வெட்டி சாய்க்கும் ‘மனுதர்ம’ வெறி

“விதவைகள்” சடலங்களை வெட்டி சாய்க்கும் ‘மனுதர்ம’ வெறி

உலகிலே எங்கும் இல்லாத ‘விதவை’ என்ற சமூகக் கொடுமையை பெண்கள் மீது திணித்தது, இந்து பார்ப்பனிய மதம் தான். இதில் கூடுதல் பாதிப்புக்குள்ளானவர்கள் பார்ப்பனப் பெண்கள். மொட்டை அடித்து, ரவிக்கையை கழற்றி, காவி உடை போர்த்தி, மூளையில் உட்கார வைத்து விடுவார்கள். எந்த ‘மகிழ்ச்சி’யான நிகழ்வுகளிலும் பங்கேற்க அவர்களுக்கு உரிமை கிடையாது. பார்ப் பனர்களை பின்பற்றி அவர்கள் வழியில் வாழ முயன்ற, வேறு உயர் வர்ணத்தவரிடமும் இது வேகமாகப் பரவியது. ஆனால், இந்து சாஸ்திர சம்பிரதாயங்களை உயர்த்திப் பிடிக்கும் பார்ப் பனர்கள், தங்கள் சமூகத்துக்கு  அதனால் பாதிப்பு ஏற்படும்போது அதைக் கைவிடத் தயங்க மாட் டார்கள். இன்று மொட்டையடித்து காவிப் புடவை சுற்றிக் கொள்ளும் பார்ப்பனப் பெண்களைப் பார்ப்பது அபூர்வம். ஆனால், பார்ப்பனியத்தைப் பின்பற்றத் துடிக்கும் ஆதிக்கசாதி சக்திகளிடம் விதவைக் கோலத்தைப் பார்க்க முடிகிறது. ‘காதரைன் மேயோ’ என்ற அமெரிக்கப் பெண், இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்தபோது, இங்கே நடந்த சமூகக்...