Tagged: விடுதலை க.இராசேந்திரன்

பன்னாட்டு விசாரணை தீர்மானத்தை இந்தியா நீர்த்து போகச் செய்யக் கூடாது: ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

பன்னாட்டு விசாரணை தீர்மானத்தை இந்தியா நீர்த்து போகச் செய்யக் கூடாது: ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

அய்.நா.வின் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் பன்னாட்டு விசாரணையை உறுதிப் படுத்துவதாக இருக்க வேண்டும் என்றும், அப்படி இருந்தால் இந்தியா தலையிட்டு துரோகம் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி தோழர்கள் கைதானார்கள். 24-03-2014 திங்கட்கிழமை காலை 11-00 மணியளவில், ஆளுநர் மாளிகை முற்றுகையிடுவதற்காக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் எதிரிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்ட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு அமைத்திட இந்திய அரசு வகை செய்ய வலியுறுத்தி நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன், த.பெ.தி.க பொதுச்செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தியாகு, தமிழ்நாடு மக்கள் கட்சி செல்வி, சேவ் தமிழ்ஸ் செந்தில், பேராசிரியர் சரசுவதி, காஞ்சி மக்கள் மன்றம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், எஸ்.டி.பி.ஐ, உள்ளிட்ட 18 இயக்கங்களை...