Tagged: விடுதலை

திருமணம் வேண்டாதது! பெரியார்

திருமணம் வேண்டாதது! பெரியார்

உலகில் அர்ச்சகன், மாந்திரிகன், சோதிடன் இவர்களைவிடப் பித்தலாட்டத்தில் கைதேர்ந்தவர்கள் கிடையாது. மதமும் கடவுள் சங்கதியும் மனித சமூகத்தின் வளர்ச்சியைப் பெரிதும் தடுத்து நிறுத்திவிட்டன. குறிப்பாகப் பெண்கள் சங்கதியை எடுத்துக் கொள்ளுங்கள். பார்ப்பான் நம்மை எப்படிக் கீழ்ச்சாதி என்று கூறி அடிமை வேலை வாங்குகிறானோ, அதைப்போலத்தான் மக்களில் சரி பகுதி எண்ணிக்கையுள்ள பெண்களை நடத்தி வருகிறோம். பெண்கள் என்றால் வெறும் குட்டிபோடும் கருவி என்றுதான் நடத்தி வருகிறோம். பெண்களும் கணவன்மார்கள் நகை, நட்டு வாங்கிக் கொடுத்தால் போதும் – நல்ல துணிமணி வாங்கிக் கொடுத்தால் போதும் என்கிற அளவுக்குத் தங்களைக் குறுக்கிக் கொண்டு விட்டார்கள். பிராமணன்-சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும், புருஷன்-பெண்டாட்டி என்ற விகிதத்துக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! உலகத்திற்குப் பயன்படும்படியான பேர் பாதி மனித சக்தியை, பெண்ணடிமை மூலம் நாம் விரயப்படுத்திக்கொண்டு இருக்கின்றோம். இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால், ‘கலியாணம்’ என்பதையே சட்ட விரோதமாக ஆக்கவேண்டும். இந்தக் ‘கலியாணம்’ என்ற...

பிப்.14 காதலர் நாள் – சிந்தனைகள் : காதல் பற்றி பெரியார்

பிப்.14 காதலர் நாள் – சிந்தனைகள் : காதல் பற்றி பெரியார்

உணர்ச்சிகளால் உந்தப் படும் காதலை மறுக்கும் பெரியார், அறிவார்ந்த புரித லோடுக் கூடிய காதலை வரவேற்கிறார். காதல் பற்றி பெரியார் கருத்து. “உண்மையில் காதல் மணம் என்றால் பெண்களும் ஆண் களும் சம நிலையில் பழகும் வாய்ப்புத் தந்து, ஒருவருடைய குணா குணங் களை மற்றவர் அறியும் சமயம் கிடைத்து ஒருவருடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமை யாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காத லாகும்!”      – குடிஅரசு 21.7.45 “திடீரென்று காதல் கொள் வது, பிறகு கஷ்டப்படுவது, கேட்டால் காதலுக்காக என்று சொல்வது; என்ன நியாயம்? இது பலமற்ற சபலத்தனம். காதலுக் காகத் துன்பத்தை அடைவது முட்டாள்தனம். காதலும் கடவுளும் ஒன்று என்று சொல் வது இதனால்தான். காதலும் கடவுளும் ஒன்று என்றால் – காதலும் பொய் கடவுளும் பொய் என்றுதான் அர்த்தம்.”  – விடுதலை 24.5.47 “ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரையொரு வர் அறிந்து...

தமிழக அரசின் அத்துமீறல்களுக்கு துணை போகும் ‘அறிவுரைக் குழுமம்’: கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்

தமிழக அரசின் அத்துமீறல்களுக்கு துணை போகும் ‘அறிவுரைக் குழுமம்’: கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்

சேலம் சிறை வாசலில் உற்சாக வரவேற்பு தேசிய பாதுகாப்புச் சட்டம் போன்ற அடக்கு முறை சட்டங்களை இனி எவர் மீதும் பயன் படுத்தக் கூடாது என்று சேலம் சிறையிலிருந்து விடுதலையானவுடன் சிறைவாசலில் அளித்த பேட்டியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தினார். இந்தச் சட்டங்கள் முறைகேடாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று கண்காணிப் பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்ட ‘அறிவுரைக் குழுமம்’ ஒன்று செயல்படுகிறது. அந்த குழுமம் கண்காணிப்பு வேலை செய்யாமல் கண்களை மூடிக்  கொண்டே ஆட்சியாளர்கள் முறைகேடாக பயன்படுத்தும் அடக்குமுறை சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது ஜனநாயகத்துக்கே அவமானம். ஓய்வு பெற்ற மூத்த நீதிபதிகள் இப்படி முறைகேட்டுக்கு துணை போய்க் கொண்டிருக்கும் போது உயர்நீதிமன்றத்தின் இளம் நீதிபதிகள் இந்த அடக்குமுறை சட்டங்கள் முறை கேடாகப் பயன்படுத்துவதை நீக்கம் செய்து விடுகிறார்கள். இதைத் தங்களுக்கு நேர்ந்த அவமானமாகக்கூட இந்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் கருதிப் பார்க்க மறுப்பது வெட்கக் கேடானது...

தலையங்கம்: பெரியார் இயக்கங்களின் கூட்டுச் செயல்பாட்டை வரவேற்கிறோம்!

தலையங்கம்: பெரியார் இயக்கங்களின் கூட்டுச் செயல்பாட்டை வரவேற்கிறோம்!

மறைந்த பெரியார் சாக்ரடீஸ் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடந்தபோது (30.5.2014) கவிஞர் அறிவுமதி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். பெரியார் கொள்கைகளுக்கு நெருக்கடி உருவாகியுள்ள அரசியல் சூழலில், பெரியார் இயக்கங்கள், தங்களுக்குள் இணைந்து செயல்படவேண்டும் என்றும், அதற்கான முன்முயற்சியை திராவிடர் கழகத் தலைவரே எடுக்க வேண்டும் என்பதே கவிஞர் அறிவுமதியின் கோரிக்கை. தொடர்ந்து பேசிய நடிகர் சத்தியராஜ் அவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் தமது உரையில் பேசியதை ‘விடுதலை’ நாளேடு கீழ்க்கண்டவாறு பதிவு செய்திருக்கிறது. “இங்கே கவிஞர் அறிவுமதி அவர்களும் நமது இனமுரசு சத்யராஜ் அவர்களும் ஒன்றைக் குறிப்பிட்டார்கள். அது பற்றி நான் கருத்து சொல்லவில்லை என்றால், என்ன நாம் எடுத்து வைத்த கோரிக்கைக்கு ஆசிரியர் (கி.வீரமணி) பதில் சொல்லாமல் போய்விட்டாரே என்று கருதிட இடம் கொடுக்கக் கூடாதல்லவா? பெரியார்...