Tagged: வாஸ்து

வாட்டி வதைக்கும் ‘வாஸ்து’ நம்பிக்கை

‘வாஸ்து’ நம்பிக்கை, இப்போது படித்தவர்கள், அரசியல்வாதிகள், மேல்மட்டத் தினரிடம் வேகமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள்,  இப்போதெல்லாம் மக்களை நம்புவதைவிட யாகங்களையும் வாஸ்துக்களையும், சோதிடர்களையும் நம்பத்துவங்கிவிட்டனர். இந்த ஆலோசகர்களின் ஆலோசனையைப் பின்பற்றினால், மக்கள் ஆதரவு கிடைத்துவிடும் என்று நம்புகிறார்கள். சென்னை கடற்கரைச் சாலையில் கையில் சிலம்புடன் ஆவேசத்துடன் நீதி கேட்கும் கண்ணகிசலை, கடந்தகால அ.இ.அ.தி.மு.க. ஆட்சியால்  2002இல் அகற்றப்பட்டது. போக்குவரத்துப் பிரச்சினைதான் காரணம் என்று பொருந்தாத ஒரு சமாதானம் சொல்லப்பட்டாலும், ‘வாஸ்து’ நம்பிக்கையின்படிதான் அது அகற்றப்பட்டது என்று செய்திகள் வந்தன. தமிழக முதலமைச்சர் அந்த வழியாகக் கோட்டைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி இப்படி ஒரு சிலை நிற்பது முதலமைச்சருக்கு நல்லது அல்ல என்று சில வாஸ்து பண்டிதர்கள் கூறியதால், சிலை அகற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்தியாவில் பிரதமர்கள், முதலமைச்சர்கள், தலைவர்கள், உயர் அதிகாரிகள், இந்த வாஸ்து மூடநம்பிக்கையில் மூழ்கிப் போய் மக்கள் வரிப் பணத்தைப் பாழாக்கி, தங்கள் அலுவலகக் கட்டிடங்களை...