குரங்குகளிடமிருந்து பெற்ற மனித கைரேகைகள்
தோழர் மா. சிங்காரவேலர் எழுதிய “விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்” மிகச் சிறப்பான அறிவியல் விளக்கங்களைக் கொண்டுள்ள நூல். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் 1934ல் இதை முதலில் வெளியிட்டது. அதிலிருந்து ஒரு பகுதி: கையிலுள்ள கோடுகளைப் பார்த்து ஜோஸ்யம் சொல்லுவது உலக முழுமையும் பரவியுள்ள ஓர் வித்தையாகும். அது வெறும் பழக்கமே அல்லாது உண்மை யல்ல. நமது கையிலுள்ள கோடு களைப் போல் நமது ஒரு காலத்து பூர்வபங்காளிகளாகிய வாலில்லாக் குரங்குகளுக்கும் உண்டு. இன்னும் தூரப் பங்காளிகளாகிய (Distnat cousing) வாலுடைய குரங்குகளுக்கும் கையில் கோடுகள் இருக்கின்றன. ஆனால் காட்சிச் சாலைகளில் வசிக்கும் காட்டு மனிதக் குரங்குகளின் கைகளைப் பார்த்து ஜோதிடம் சொல்வார் யாருமில்லை. நமது கைகளில் இருக்கும் கோடுகள் (Grooves) நமது காலத்தில் நமது குரங்கு மூதாதைகள் மரத்தில் தாவிப் பிடித்து தாண்டும் போது உண்டான தோல் மடிப்புகள். அந்த வம்சத்தலிருந்து வந்தவர்களாகிய நமக்கும் அந்த மடிப்புகள் பரம்பரை வழியாக (Hereditory) தோன்றுகின்றன. நமது கைக்கோடுகள்...