Tagged: வர்தா

”புயலில் அழிந்த ஈழத் தமிழர் முகாம் மீட்டெடுக்க தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள் !”

அன்பிற்குரியீர்! வணக்கம். வர்தா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. இன்னும் சென்னை மக்கள் வாழ்வு முழுமையாக மீண்டுவிடவில்லை. புயல் கடந்த அடுத்த நாளிலிருந்து மீட்புப் பணிகள் சென்னையெங்கும் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது. இன்னும் சீராகாதது புயல் வேகத்தின் அளவை நமக்கு உணர்த்துவதாகவே உள்ளன. அப்படி ஒரு நாளில் நம் வாழ்வை அடியோடு புரட்டிப் போட்டுவிட்டது வர்தா புயல். அரசு வேரோடு சரிந்த மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தி வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக மின்சாரத்தை தர முயற்சிக்கிறது. நமக்கு இப்படி எல்லாமும் முழுமையாக இல்லாவிட்டாலும் நடந்து கொண்டுள்ளன. ஆனால் ஈழத் தமிழர் முகாம்களின் நிலை முற்றிலும் வேறாக உள்ளது. புயல் வந்து போய் ஒரு வாரமாகியும் இப்போது வரை கும்முடிப்பூண்டி ஈழத் தமிழர் முகாமில் எந்தப் பணியையும் இதுவரைக்கும் அரசு நிர்வாகம் தொடங்கவேயில்லை. கூரைகளாலும் சிமிண்ட் ஓடுகளாலும் வானம் மறைத்த வீடுகள், இன்னும் சரியாகச் சொன்னால் கூடுகள்தான் அவை. அனைத்தும் பெயர்ந்து...