Tagged: வடக்கிருந்து உயிர்நீத்தல்

உண்ணாவிரதத்தில் உயிர் நீத்த ‘கோமாதா’க்கள்!

‘வடக்கிருந்து உயிர் நீத்தல்’ என்று ஒரு வழக்கம் உண்டு. உணவு உறக்கமின்றி அப்படியே ‘உயிர் விடுதல்’; வேதாந்திகளைக் கேட்டால் இது ‘ஆன்மீகம்’ என்பார்கள். இப்படி உயிர் விடுவோர் மீது தற்கொலைக்கு முயற்சித்தார்கள் என்று வழக்குகள் தொடர்ந்ததாகத் தெரியவில்லை. இப்போதெல்லாம் ‘ஒரு நாள் உண்ணாவிரதம்’, ‘அடையாள உண்ணாவிரதம்’ எல்லாம் வந்து விட்டன. ‘சாகும் வரை உண்ணாவிரதம்’கூட அவ்வப்போது நடக்கிறது. அதாவது இரண்டு நாள் கழித்து காவல்துறை கைது செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். முன்பெல்லாம் வியாழக்கிழமை, செவ்வாய் கிழமை, சனிக்கிழமை என்று வாரத்துக்கு ஒரு நாள் விரதம் இருப்பது  உண்டு. இது பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் விரதம். இப்போது அந்த ‘விரதம்’ புதிய உருமாற்றம் பெற்று விட்டது. அதாவது அந்த நாள்களில் ‘அசைவம்’ சாப்பிடுதல் கூடாது; மற்றபடி சைவ சாப்பாட்டை மூச்சுமுட்ட ஒரு பிடி பிடிக்கலாம். இப்படி சாப்பிடாமல் இருப்பது அகிம்சை போராட்டம் என்கிறார்கள். சொன்னால் கோபிக்கக் கூடாது. உண்மையில்...