Tagged: யாரும் யாருக்கும் அடிமையில்லை

தன்னை பற்றி பெரியார்

தந்தைபெரியார் தன்னை யார் என்பதை எப்படி சொல்லியிருக்கிறார் என்பதை படியுங்கள் இவ்வுலகில் உள்ள உயிர் உள்ள பிராணிகளைப் போல நானும் ஒரு பிராணியே! அவைகளை எப்படி நாய் என்றும் ,குதிரை என்றும் ,கழுதை என்றும் பெயரிட்டு இருக்கிறார்களோ ,அதே போல எனக்கு மனிதன் என்று பெயரிட்டு இருக்கிறார்கள் அதனால் தன்னையும் ஒரு உயிருள்ள பிராணியாகவே அறிவித்துக்கொண்டார் ஆனால் அந்த நாய் ,குதிரை ,கழுதை இவைகளுக்கு சாதி கிடையாது ,மதம் கிடையாது ,நாடு கிடையாது எங்கிருந்தாலும் அவைகள் நாய் ,கழுதை , குதிரை தான் ஆனால் மனிதனுக்கு மட்டும் சாதி ,மதம் ,இனம் ,நாடு என்று பல்வேறு பிரிவுகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் அதனால்தான் நான் ஒரு நாட்டுக்காரனோ ,ஒரு இனத்துக்காரனோ ,ஒரு மதத்துக்காரனோ ,ஒரு சாதிக்காரனோ, ஒரு மொழிக்காரனோ கிடையாது உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒரு மனித இனத்தை சார்ந்தவர்களே என்கிற அடிப்படையில் வாழ்ந்து வருகின்றவன் ஆனால் ஒருநாடு இன்னொரு நாட்டின்மீது...