Tagged: மோடி அரசு

ஆர்.எஸ்.எஸ். பிடிக்குள் மோடி ஆட்சி

ஆர்.எஸ்.எஸ். பிடிக்குள் மோடி ஆட்சி

மோடியின் ஆட்சி ஆர்.எஸ்.எஸ். கட்டுப் பாட்டு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதற்கு சான்றாக செய்திகள் வந்து கொண் டிருக்கின்றன. இஸ்லாமிய எதிர்ப்பை முன்வைத்து இந்தியாவில் இந்துக்களை அணி திரட்டி, ‘இந்துத்துவா’ நாடாக மாற்றுவதற்கான திட்டத்தின் கீழ் ‘சங்பரிவார்’ காய் நகர்த்துகிறது. இதற்காகவே அரசின் திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன. புதுடில்லியில் அமைச்சகங்களில் ‘சவுத் பிளாக்’ என்று அழைக்கப்படும் வெளியுறவுத் துறை அதிகார வலிமையுடன் திகழ்வதாகும். பார்ப்பனர்கள் அதிகாரப் பிடிக்குள் இந்தத் துறை சிக்கியிருக்கிறது. ஈழத் தமிழர்கள் நடத்திய விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு சூழ்ச்சிகரமான செயல் திட்டங்களை உருவாக்கியது இந்த ‘சவுத் பிளாக்’தான்! இப்போது ‘சவுத் பிளாக்’கையே ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, ஆர்.எஸ்.எஸ். நேரடியாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் அதிர்ச்சிகரமான செய்திகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. பிரதமர் மோடியின் பாதுகாப்புத் துறை ஆலோசகராக இருக்கும் அஜீத் டோவல் என்பவரிடம் வெளிநாட்டுத் துறை தொடர்பான கொள்கைகளை முடிவெடுக்கவும் செயல்படுவதற்குமான அதிகாரங்கள் வந்துவிட்டன. மோடியே இந்த அதிகாரத்தை வழங்கிவிட்டார்....