Tagged: முள்ளிவாய்க்கால் முற்றம்

பல்லாயிரம் தமிழர்கள் திரண்டனர்; ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ திறக்கப்பட்டது

பல்லாயிரம் தமிழர்கள் திரண்டனர்; ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ திறக்கப்பட்டது

ஈழத்தின் இறுதிப் போரில் உயிர்துறந்த பல்லா யிரம் மக்களின் நினைவாக தஞ்சையில் முள்ளி வாய்க்கால் முற்றம் இரண்டரை லட்சம் ஏக்கர் பரப்பளவில்  எழுப்பப்பட்டுள்ளது. நெஞ்சை உலுக்கும் படுகொலை காட்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட் டுள்ளன. ஈழத் தமிழர்களுக்காக உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 20 தமிழினப் போராளிகளின் சிலைகளும், தமிழ் வளர்த்த அறிஞர், பேராசிரியர் படங்களும் இடம் பெற்றுள்ளன. காவல்துறை கெடு பிடிகளால் நீதிமன்ற அனுமதியோடு திட்டமிட்டதற்கு இரண்டு நாள் முன்னதாக முற்றம் திறக்கப்பட்டது. 7, 8, 9 தேதிகளில் தமிழக முன்னணித் தலைவர்கள், கலைத் துறையைச் சார்ந்தவர்கள், உணர்வாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடந்தன. உலகத் தமிழர் பேரவை ஒழுங்கு செய்த இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய பழ. நெடுமாறன், இந்த முற்றத்தை தமிழர்களுக்கு சமர்ப்பித்தார். பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் விழாவில் திரண்டிருந்தனர். கலைநயத் துடன் வடிவமைக்கப்பட்ட சிற்பங்களும், ஓவியங் களும் உணர்ச்சியூட்டுவதாய் அமைந்துள்ளது என பலரும் தெரிவித்தனர். கழகத் தலைவர் கொளத்தூர்...

தலையங்கம்: இடித்தது சுற்றுச் சுவரை மட்டும் அல்ல!

தலையங்கம்: இடித்தது சுற்றுச் சுவரை மட்டும் அல்ல!

ஈழப் போரில் சிங்கள இராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள், தாயகத்தின் விடுதலைக்காக இராணுவத்தை எதிர்த்துப் போராடி களப்பலியான மாவீரர்கள் நினைவாக தஞ்சையில் கடுமையான உழைப்பினால் கட்டி எழுப்பப்பட்ட முள்ளி வாய்க்கால் முற்றம் – தமிழினத்தின் வரலாற்றுச் சின்னம்! இழிவையும், மடமையையும், மக்கள் பொதுப் புத்தியில் ஏற்றிக் கொண்டிருக்கிற கோயில்கள் அல்ல இவை. இந்த முற்றம், தமிழர்களின் உள்ளத்தில் விடுதலை வேட்கையை கனலாக மூட்டி நிற்கிறது. தமிழ்நாட்டில் இத்தகைய எழுச்சியூட்டும் முற்றங்கள் தான் கோயில்களுக்கு மாற்று என்று நாம் கருதுகிறோம். இந்த முற்றத்தைக் கட்டி எழுப்ப எத்தனையோ தமிழர்கள் தங்களை அர்ப்பணித்து உழைத்திருக்கிறார்கள். தங்கள் ஆற்றல்களை பங்களிப்புகளாக வழங்கியிருக்கிறார்கள். அது செங்கல்லும் சிமெண்டும் கலந்த கட்டிடம் மட்டுமல்ல; உணர்வுகளைச் சுமந்து நிற்கும் பாசறையும்கூட! அத்தகைய முள்ளிவாய்க்கால் முற்றம் திறக்கப்பட்டு, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை நெஞ்சில் ஈரமின்றி அதன் சுற்றுச் சுவரையும் அழகு மிளிர உருவாக்கப்பட்டிருந்த...