‘அட்சய திருதை’ சிறப்பு வினா-விடை!
‘அட்சய திருதை’ நாளில் தங்கம் வாங்கினால், அது மேலும் மேலும் பெருகும். – நகைக்கடை விளம்பரங்கள் அப்படின்னா, கடைக்காரங்க தங்கத்தை வாங்கத்தானே வேண்டும்! ஏன், கூவிக் கூவி விக்குறாங்க? ‘அட்சயம்’ என்றால், ‘வளரும்’ என்பது அர்த்தம். தங்கம்தான் வாங்க வேண்டுமென்பது அல்ல, எதை வாங்கினாலும் வளரும். – செய்தி அப்ப இந்தியா, உலக வங்கியிடம் கடன் வாங்குவதற்கும் அதுதான் உகந்த நாள்ன்னு சொல்லுங்க! ‘அட்சய திருதை’ நாளில் ஒவ்வொரு நொடியும் புனிதமானது. தனியாக முகூர்த்த நேரம் பார்க்க வேண்டியதில்லை. – செய்தி ஆமாம்! வர்த்தக நலன் கருதி அன்றைக்கு ‘ராகு காலம்’, ‘எமகண்டம்’ எல்லாம் ‘தள்ளுபடி’! வைகாசி மாதத்தில் வளர்பிறை மூன்றாம் திதியில் வருகிற திருதியைதான் உண்மை அட்சய திருதி திருநாள். இந்த நாளில் சுவாதி நட்சத்திரம் இணைந்து விட்டால், நன்மை பயக்காது என்பதற்காக, அது சித்திரை மாத வளர்பிறை நாள் திருதிக்கு மாற்றப்பட்டு, அட்சய திருதி கொண்டாடப்படுகிறது....