‘மாவீரன் கிட்டு’
சமரசம் இல்லா மல் ஜாதி ஒடுக்கு முறை கவுரவக் கொலைகளை சாடு கிறது. ‘மாவீரன் கிட்டு’ திரைப் படம், ‘அழகர்சாமியின் குதிரை’, ‘ஜீவா’ போன்ற சிறப்பான படங்களை இயக்கிய சுசீந்திரன், இத்திரைப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். “தீண்டப்படாத வர்களின்” பிணங்களைக்கூட ஜாதி வெறியர்கள் தங்கள் வீதி களில் எடுத்துச் செல்ல அனுமதிக்காத போக்கு இப்போ தும் தொடருகிறது. அதே காட்சியை முன் வைத்து திரைப் படம் தொடங்குகிறது. சொந்த மகளையே தலித் இளைஞரை திருமணம் செய்த ‘குற்றத்துக் காக’ ஜாதி சமூகத்தின் ஒதுக்க லுக்கு உள்ளாகி விடுவோம் என அஞ்சி, காதல் மணம் முடித்து வந்த மகளையே கொலை செய் கிறார் ஆதிக்க ஜாதி தந்தை. ஆதிக்க ஜாதியில் பிறந்தாலும், ஜாதி எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக நின்று சொந்த மகளை ‘தலித்’ இளைஞருக்கு திருமணம் செய்ய முன் வரு கிறார் ஒரு ஜாதி எதிர்ப்பாளர். அதன் காரணமாக ஜாதி ஆதிக்க வாதிகள் அவரை...