Tagged: மாமாங்கம்

‘தீர்த்த’த் தண்ணீரை முகர்ந்து பார்க்காதே!

‘தீர்த்த’த் தண்ணீரை முகர்ந்து பார்க்காதே!

1933ஆம் ஆண்டில் ‘குடிஅரசில்’ மாமாங்கம் குறித்து ‘சித்திரபுத்திரன்’ என்ற பெயரில் பெரியார் எழுதிய உரையாடல்: புராண மரியாதைக்காரன் கேள்வி: ஐயா, சுயமரியாதைக்காரரே! கும்பகோண மாமாங்கக் குளத்தில் ஒரு அற்புதம் நடக் கின்றதே அதற்குச் சமாதானம் சொல்லும் பார்ப்போம். சுயமரியாதைக்காரன் பதில்: என்ன அற்புதமய்யா? பு.ம.: மாமாங்கக்குளம் எவ்வளவு சேறாய் இருந்த போதிலும், அதில் எவ்வளவு ஜனங்கள் குளிக்கிறார்களே, அந்தக் குளத்துத் தண்ணீர் ஏன் குறைவதில்லை. இதற்குப் பதில் சொல் பார்ப்போம். சு.ம.: இது ஒரு நல்ல புத்திசாலித் தனமான கேள்விதான். இதன் காரணம் சொல்லுகிறேன். சற்று தயவு செய்து கேட்க வேண்டும். அதாவது, மாமாங்கக் குளத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் முனிசி பாலிட்டியார் இறைத்து விடுவார்கள். பிறகு ஓர் இரண்டு அடி உயரத் தண்ணீர் மாத்திரம் அதில் இருக்கும். அடியில் சிறிது மணலும் கொட்டி வைப்பார்கள். ஜனங்கள் தண்ணீரில் இறங்கியவுடன் மணல், சேறு, ஜனங்களின் அழுக்கு ஆகிய எல்லாம் சேர்ந்து குழம்பு மாதிரி...